ipl

Advertisment

ஐபிஎல் தொடரில் அடுத்தாண்டு அறிமுகமாக இருக்கும் 9-ஆவது அணியை வாங்க மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமீரகத்தில் நடைபெற்று வந்த 13-ஆவது ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததையடுத்து, அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான முன்னேற்பாடுகளில் பிசிசிஐ கவனம் செலுத்தி வருகிறது. 14-ஆவது ஐபிஎல் தொடரின் போது கூடுதலாக ஒரு அணி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்றும், அது குஜராத்தைப் பின்புலமாகக் கொண்ட அணியாக இருக்கும் என்றும் சில தினங்களுக்கு முன்னால் தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து, இந்த அணியை வாங்குவதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆர்வம் காட்டி வருவதாகவும், நடிகர் மோகன்லாலுடன் இணைந்து இப்புதிய அணியை வாங்க பைஜூஸ் நிறுவனம் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பிரபல திரைநட்சத்திரங்களான ஷாருக்கான்மற்றும் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் ஐபிஎல் தொடர்களில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகின்றனர்.

Advertisment

இது குறித்தானஎந்த அதிகாரப்பூர்வ தகவலும் பிசிசிஐ மற்றும் மோகன்லால் தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.