ADVERTISEMENT

நடப்பு ஐபிஎல் தொடரில் சாதனை மேல் சாதனை படைக்கும் தோனி!

10:22 AM Oct 05, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 52 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, விக்கெட் இழப்பின்றி 17.4 ஓவரில் 181 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில், தோனி விக்கெட் கீப்பராக புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் கே.எல்.ராகுல் அடித்த பந்தை தோனி கேட்ச் செய்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 கேட்ச்சுகள் செய்த வீரர் என்ற பட்டியலில் இணைந்துள்ளார். இப்பட்டியலில், கொல்கத்தா அணி வீரர் தினேஷ் கார்த்திக் 103 கேட்ச்களுடன் முன்னணியில் உள்ளார். தோனி 100 கேட்ச்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை தோனி சில தினங்களுக்கு முன்னால் படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT