2019 ஆம் ஆண்டில் அதிகம் பாராட்டப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த கருத்துக்கணிப்பை யுவ்கவ் என்ற நிறுவனம் நடத்தியது.

Advertisment

top 10 admired people of india 2019

உலகம் முழுவதும் 41 நாடுகளில் பாராட்டத்தக்க ஆண்கள் யார், பெண்கள் யார் என்பது குறித்த இந்த கருத்துகணிப்பில் இந்திய அளவில் ஆண்கள் பிரிவில் பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பிடித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 15.66 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் 8.58 சதவீதம் வாக்குகளுடன் தோனி உள்ளார். இந்த பட்டியலில் 7 ஆம் இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியும், எட்டாவது இடத்தில் சச்சினும் உள்ளனர்.

அதேபோல அதிகம் போற்றப்படும் பெண்கள் பட்டியலில் குத்துசண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் 10.3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். தொடர்ந்து கிரண்பேடி (9.46 சதவீதம்), லதா மங்கேஷ்கர் (9.23 சதவீதம்) சுஷ்மா சுவராஜ் (7. 13 சதவீதம்) தீபிகா படுகோன் (6.35 சதவீதம்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.