ADVERTISEMENT

தோனி இல்லாமலா! சிஎஸ்கே கொடுத்த தரமான அப்டேட்!

10:38 AM Mar 31, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இன்று தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் இன்று நடைபெறும் போட்டியில் தோனி விளையாடுவது சந்தேகம் எனத் தகவல்கள் பரவின.

இன்று தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் சென்னை - குஜராத் அணிகள் மோதும் முதல் போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே சார்பில் களமிறங்கும் தோனியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நேரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இடது காலின் மூட்டுப் பகுதியில் வலி இருந்ததாவும் அதனால் இன்று நடைபெறும் போட்டியில் தோனி விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின.

இந்த தகவல்கள் பரவிய சில மணி நேரத்தில் குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி நிச்சயம் களம் காண்பார் என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். தோனியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT