ADVERTISEMENT

சர்ச்சை ஆகும் விராட் கோலியின் அவுட்!!

03:06 PM Feb 18, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தது. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது. இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு சுழல் கைகொடுக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து தடுமாறியது. அஸ்வின் மூன்று விக்கெட்களையும், ஜடேஜா மூன்று விக்கெட்களையும் ஷமி நான்கு விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியில் கவாஜா 81 ரன்களை எடுத்து அவுட்டாக ஹேண்ட்ஸ் கோப் 72 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்நிலையில் நேற்று தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 17 ரன்களில் முதலில் வெளியேற அடுத்தடுத்து விக்கெட்களை இந்திய அணி தொடர்ச்சியாக இழந்தது. விராட் கோலி மட்டும் நிதானமாக ஆடி 44 ரன்களில் ஆடிக் கொண்டு இருந்தபோது குஹன்மன் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். ஆனால் இது குறித்து இணையத்தில் விராட் கோலிக்கு தவறாக அவுட் கொடுத்து விட்டார்கள் என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

விராட்டின் பேடில் விழுந்த பந்து அதே சமயத்தில் பேட்டிலும் பட்டது. ஐசிசி விதிப்படி பந்து ஒரே நேரத்தில் பேட்டிலும் பேடிலும் பட்டால் பந்து பேட்டில் பட்டதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால் விராட்டுக்கு அவுட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவுட் என நடுவர் சொன்னவுடன் விராட் டிஆர்எஸ் எடுத்தார். ஆனால் மூன்றாம் நடுவரும் விராட் அவுட் ஆனதாக அறிவித்தார். இந்நிலையில் இது குறித்த விவாதங்கள் இணையத்தில் சர்ச்சை ஆகி வருகிறது. தற்போது இந்திய அணி 208 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. அஸ்வின் 25 ரன்களுடனும் அக்ஸர் படேல் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT