ADVERTISEMENT

மும்பையை பழிதீர்க்குமா தல தோனியின் படை...?

10:20 AM May 07, 2019 | tarivazhagan

ப்ளே-ஆஃப் சுற்றுகளில் 5-வது முறையாக சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கவுள்ளன. அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மும்பை மற்றும் சென்னை அணிகள் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் 6 மும்பை அணியும், 1 சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளது. மும்பை-சென்னை அணிகள் இடையேயான நாக் அவுட் போட்டிகளில் 4 முறை சென்னையும், 3 முறை மும்பை அணியும் வென்றுள்ளது. இதில் இரு முறை சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி கோப்பையை வென்றுள்ளது.

மும்பை அணி இதுவரை 3 முறை கோப்பையை வென்றபோதும் தோனி விளையாடிய அணிக்கு எதிராக வென்றுள்ளது. இருமுறை சென்னை அணிக்கு எதிராகவும், ஒரு முறை புனே அணிக்கு எதிராகவும் கோப்பையை வென்றுள்ளது.

டுபிளசிஸ் மற்றும் ரெய்னாவின் ஃபார்ம், பினிஷிங் கிங் தோனி, பலமான ஸ்பின் யூனிட், தீபக் சஹாரின் பவுலிங், பவர் ப்ளே ஓவர்களில் அதிக விக்கெட்கள் எடுப்பது மற்றும் டுபிளசிஸ், ஜடேஜா, பிராவோ, ரெய்னாவின் அசத்தல் பீல்டிங் ஆகியவை சென்னையின் பலமாக உள்ளது. ஆட்டத்தின் முதல் பாதியில் அதிக ரன்கள் அடிக்காமல் இருப்பது, தோனியை அதிகம் நம்பியிருப்பது, டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் இல்லாதது என சில பலவீனங்களை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் சென்னை உள்ளது.

நிதானமான தொடக்க ஆட்டங்கள், ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்டர் ஸ்கில், பொல்லார்டின் பவர் ஹிட்டிங், ஸ்பின் பவுலிங், மிரட்டும் டெத் பவுலிங் என மும்பை அணி பலமாக உள்ளது. மிடில் ஓவர்களில் ரன்கள் எடுக்க தவறுவது, வலுவான 3-வது ஸ்பின்னர் இல்லாதது உள்ளிட்ட பலவீனங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது மும்பை.


மும்பை அணியின் பெரிய பலவீனமாக இருப்பது மிடில் ஓவர்களில் குறைவான ரன் ரேட்டில் விளையாடுவது. ஆனால் சென்னை அணியின் பலமே மிடில் ஓவரில் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட் எடுப்பது தான். மிடில் ஓவரில் சென்னை அணியின் பவுலர்கள் 36 விக்கெட்கள் எடுத்துள்ளனர். எகானமி ரேட் 6.65 என்பது கவனிக்கத்தக்கது.

மும்பை அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இந்த ஆண்டு கலக்கி வருகிறார். மும்பை அணி குறைவான ரன்கள் எடுத்திருந்த போதும், சிறப்பாக ஃபினிஷிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தியுள்ளார் பாண்டியா. அதேபோல பவுலிங்கில் தேவையான போது சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் 14 போட்டிகளில் 373 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 197, சராசரி 47. மேலும் 14 விக்கெட்களையும் வீழ்த்தி மும்பை அணியின் கேம் சேஞ்சராக இருந்து வருகிறார்.

சென்னை அணியில் வாட்சன் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே 96 ரன்கள் எடுத்துள்ளார். மற்ற போட்டிகளில் பெரிதாக விளையாடவில்லை. சென்னை அணியின் ஸ்பின்னர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் 30 விக்கெட்கள் எடுத்து, 6-க்கும் குறைவான எகானமி ரேட் மற்றும் 15.60 பவுலிங் சராசரி கொண்டுள்ளனர்.

தோனி மற்றும் ரெய்னா ஆகியோரின் பேட்டிங் சராசரி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டிகளில் 51 மற்றும் 61. ஆனால் சென்னை அணிக்கு எதிராக ரோஹித் சர்மாவின் சராசரி நாக் அவுட் போட்டிகளில் 16 மட்டுமே.

மும்பை அணிக்கு பெரிய சவாலாக இருப்பது சேப்பாக்கம் மைதானத்தில் ஸ்பின் பவுலர்களான தாகிர், ஜடேஜா மற்றும் ஹர்பஜன் ஆகியோரின் பவுலிங்கை எதிர்கொள்வது தான்.

சென்னை அணிக்கு எதிராக மும்பை அணி வெற்றி பெற்ற பெரும்பாலான போட்டிகளில் டெத் ஓவர்களில் மும்பை அணி பேட்ஸ்மேன்கள் எடுத்த ரன்களே ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்துள்ளது. மேலும் டெத் ஓவர்களில் பொல்லார்ட் சென்னை அணிக்கு எதிராக பேட்டிங்கில் எடுத்த 20 முதல் 50 ரன்கள் சில போட்டிகளில் மும்பை அணியின் வெற்றியை தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் மும்பை அணியும், 2 போட்டியில் சென்னை அணியும் வெற்றிபெற்றுள்ளது. இதுவரை சென்னை மற்றும் மும்பை அணிகள் 28 போட்டிகளில் மோதியுள்ள நிலையில் 16 மும்பையும், 12 சென்னையும் வெற்றி பெற்றுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 51 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 32 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 19 முறையும் வென்றுள்ளது. சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 164, சராசரி இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் 151.

சேப்பாக்கம் மைதானத்தில் அதிகபட்ச ரன்கள் சென்னை - 246/5 (சென்னை vs. ராஜஸ்தான்). குறைந்தபட்ச ரன்கள் பெங்களூர் - 70/10 (சென்னை vs. பெங்களூர்). அதிகபட்ச ரன்களை சேஸிங் செய்தது சென்னை - 208/5 (சென்னை vs பெங்களூர்), குறைந்த ரன்களை டிஃபண்ட் செய்தது சென்னை - 151/7 (சென்னை vs கொல்கத்தா).

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா(கேப்டன்), குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், குருணல் பாண்டியா, ஹார்திக் பாண்டியா, போலார்ட், ராகுல் சஹார், லசித் மலிங்கா, ஜாஸ்ரிட் பும்ரா, மிட்செல் மெக்லினகஹான்/எவின் லீவிஸ்/பென் கட்டிங், இஷான் கிஷன்/ மாயன்க் மார்க்கண்டே/ அனுகுல் ராய்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

சுரேஷ் ரெய்னா, டு பிளசிஸ், அம்பதி ராயுடு, மகேந்திர சிங் தோனி(கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஷேன் வாட்சன்/மிட்செல் சாண்ட்னர், முரளி விஜய்/துரூவ் ஷோரி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT