ADVERTISEMENT

வாண வேடிக்கை காட்டிய ஆஸி! - ஆட்டத்தை மாற்றிய பாக்!

06:06 PM Oct 20, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டம் இன்று (20-10-23) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்து வீச முடிவு செய்தது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியின் வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் பார்ட்னர்சிப் அமைத்து தலா 1 சதம் அடித்து ரன்களை குவித்தனர். அந்த வகையில், டேவிட் வார்னர் 124 பந்துகளில் 14 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் அடித்து 163 ரன்களை வாரிக் குவித்தார். அதேபோல், மிட்செல் மார்ஷ் 108 பந்துகளில் 10 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் அடித்து 121 ரன்கள் குவித்தார்.

27 ஓவர்களுக்கு மேலாக விளையாடிய இந்த வீரர்கள் அவுட் ஆகாமல் களத்தில் நின்றனர். அதன் பின்பு, ஆஸ்திரேலியா 33.5 ஓவர்களில் 259 ரன்கள் இருந்தபோது ஷாகித் கான் வீசிய பந்தில் மிட்செல் மார்ஷ் முதல் அவுட்டானார். அதைத் தொடர்ந்து, மைதானத்தில் களமிறங்கிய க்ளென் மாக்ஸ்வெல் அடுத்த முதல் பந்திலேயே அவுட் ஆனார்.

இதையடுத்து, ஸ்டீவன் ஸ்மித் 7 ரன்கள் எடுத்து 38.1 ஓவரில் அவுட்டானார். சதம் அடித்த டேவிட் வார்னர் 163 ரன்கள் எடுத்து 42.2 ஓவரில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய வீரர்களான மார்கஸ் ஸ்டோனிஸ், மார்னஸ் என அடுத்தடுத்த வீரர்கள் மிகவும் சொற்பமான ரன்களை எடுத்து அவுட் ஆனார்கள். இந்த போட்டியின் இறுதியில், ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 367 ரன்களை எடுத்திருந்தது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வீசிய பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அஃப்ரிடி 5 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரெளஃப் 3 விக்கெட்டுகளையும், உசாமா மிர் 1 விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT