Run out

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

பாகிஸ்தான் கிரிக்கெட் டீமுக்குதான் எப்படியாவதுவிநோதமான விஷயங்கள்நடந்தபடி இருக்கும். முகமது ஷேஷாத்தை ரன்அவுட் செய்வதுபோல் சங்கக்கரா ஏமாற்றியது போன்ற காமெடியான சம்பவங்களை இதற்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அந்தவகையில், இம்முறை முன்பு நடந்த எல்லாவற்றையும்தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில்பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் இழப்புடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. களத்தில் அசார் அலி - அசாத் சஃபீக் இணை இருந்தது. 52வது ஓவரை பீட்டர் சிடில் வீச அசார் அலி பந்தை எதிர்கொண்டார். பேட்டில் பட்டு விலகிச்சென்ற பந்து தேர்டுமேன் திசையை நோக்கி வேகமாகப் பாய்ந்தது. ஆனால், பவுண்டரி லைனுக்கு சில இன்ச்சுகள் முன்பாகவே பந்து ஊர்ந்தபடி நின்றது. இதை அறிந்திருக்காத இரு வீரர்களும் விக்கெட்டின் மையத்தில் நின்று உற்சாகமாகஉரையாடிக் கொண்டிருந்தனர். பந்தை மிட்சல் ஸ்டார்க் எடுத்து வீச, கேப்டன் டிம் பெயின் சற்றும் எதிர்பார்க்காத விதமாக அசார் அலியை ரன்அவுட் ஆக்கினார்.

Advertisment

நடந்ததுபுரியாமல் திகைத்தஅசார் அலி குழம்பியபடியே பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். நிதானமாக ஆடிக்கொண்டிருந்த அசார் அலி 64 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் இப்படியொரு ரன்அவுட் யாரும் ஆகியிருக்க மாட்டார்கள் என்றே சொல்லுமளவுக்கு, இருந்தது அந்த ரன்அவுட்.