ADVERTISEMENT

சச்சினின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்த 18 வயது ஆப்கானிஸ்தான் வீரர்...

05:47 PM Jul 05, 2019 | kirubahar@nakk…

உலகக்கோப்பையில் நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் ஹோப் மற்றும் பூரன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது. 312 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி கடைசிவரை போராடி 288 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் இளம் வீரர் இக்ரம் அபாராமாக ஆடி 93 பந்துகளில் 86 ரன்களை குவித்தார். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் இளம் வயதில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன் சச்சின் 1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது 18 வயது 318வது நாளில் 81 ரன்கள் எடுத்தார். அதுவே குறைந்த வயதில் உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த சாதனையாக இருந்தது. தற்போது இக்ரம் 18 வயது 278 நாட்களில், 86 ரன்கள் எடுத்து சச்சினின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT