நேற்றைய ஆட்டத்தில் தோனியின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

sachin appreciates dhoni's innings in last match

Advertisment

Advertisment

கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போது அந்த போட்டியில் தோனியின் ஆட்டம் சிறப்பாக இல்லை என விமர்சித்தார். இது பெரும் சர்ச்சைகளையும், விவாதங்களையும், ரசிகர்களுக்கிடையே சண்டைகளையும் ஏற்படுத்திய. பலரும் தோனியின் ஆட்டம் குறித்து விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின், "மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான ஆட்டத்தில் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா இவர்களுடைய பார்ட்னெர்ஷிப் ஆட்டத்தை மாற்றும் வகையில் இருந்தது. அவர்களுடைய கூட்டணி இல்லை என்றால் நாம் 260 என்ற ஸ்கோரை தாண்டியிருக்க மாட்டோம். குறிப்பாக கடைசி ஓவரில் தோனி அடித்த 16 ரன்களை மறக்க வேண்டாம். அவர் வலுவாக ஆட்டத்தை முடித்தார்" என தெரிவித்துள்ளார்.

தோனி மீது விமர்சனம் வைத்த சச்சினே தற்போது அவரை பாராட்டியுள்ளதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் சச்சின் விமர்சனம் செய்த போது "தோனி தனது பேட்டால் இதற்கு பதிலளிப்பார்" என கங்குலி தெரிவித்திருந்தார். அவரது கணிப்பு உண்மையாகிவிட்டது எனவும் தெரிவித்து வருகின்றனர்.