ADVERTISEMENT

துரித உணவும் குடிப்பழக்கமும் ஈரலை பாதிக்குமா? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

05:03 PM Jul 10, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

துரித உணவுகள் மற்றும் குடிப்பழக்கம் குறித்த பல்வேறு தகவல்களை நம்மோடு டாக்டர் அருணாச்சலம் பகிர்ந்துகொள்கிறார்.

துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது உடலின் பல்வேறு பகுதிகளை பாதிக்கும். இறுதிக்கட்டத்தில் இது கேன்சராக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. ஈரல் சுருங்கிப் போகும் நிலையும் ஏற்படும். சாராயம் குடிப்பவர்கள் ஆரம்பத்தில் சற்று பொலிவாக இருப்பார்கள். அதன் பிறகு அவர்களுக்கு தொப்பை வரும். அந்தப் பழக்கத்தால் ஈரலில் வீக்கம் ஏற்படும். அளவு அதிகமாகும்போது ஈரல் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்க ஆரம்பிக்கும். பொதுவாகவே வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

எந்த உணவாக இருந்தாலும் அதை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். குடிப்பழக்கம் அதிகமாக, அதிகமாக ஈரலில் காயம் அதிகமாகும். அந்தப் பழக்கம் குறையும்போது ஈரல் தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கும். மறுவளர்ச்சி என்பது ஈரலில் சாத்தியம். உணவை ரத்தத்தில் சத்தாக மாற்றுவது நம்முடைய ஈரல் தான். சில மருந்துகளால் கூட ஈரலில் காயங்கள் ஏற்படும். மருந்துகளைக் கூட கவனமாகக் கையாள வேண்டும்.

பாதிப்புகள் ஏற்பட்ட பிறகாவது குடிப்பழக்கத்தை நிறுத்துவது ஈரலுக்கு நல்லது. தேங்காய், எண்ணெய், மசாலா ஆகியவற்றை உணவில் குறைத்துக்கொள்ள வேண்டும். வறுத்த உணவுகளையும் நிறுத்த வேண்டும். காய்கறிகள், வேகவைத்த உணவுகளை உண்ணுதல் அவசியம். நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் மிகவும் முக்கியம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT