ADVERTISEMENT

இல்லறம் நல்லறமாக மாற என்ன செய்ய வேண்டும்?

12:36 PM Mar 23, 2020 | suthakar@nakkh…

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் பெரிது இல்லற நல்வாழ்வை ஏற்று நல்லறம் செய்தல். இல் வாழ்க்கை எல்லா அறங்களையும் செய்யும் நிலையை தருவதால் இல்லறம் எனப் படுகிறது. அறங்களை கூற வந்த வள்ளுவர் இல் வாழ்க்கையை முதல் அதிகாரமாக வைத்திருக்கிறார். அற வழியில் இல் வாழ்க்கை நடத்துவதை விட சிறந்த அறம் வேறு எதுவும் இல்லை. பிறர் பழி சுமக்காது அற வழியில் பொருள் ஈட்டி அதன் மூலம் பெற்றதை பகுத்துண்டு வாழ்வதே சிறந்த வாழ்க்கை. பிற உயிர்கள் இடத்தில் அன்பும் , இல்லாதவர்க்கு கொடுக்கும் அறமும் பெற்று இருக்கும் இல் வாழ்வே பயனுள்ள வாழ்வு. தானும் அறநெறி தவறாது வாழ்ந்து மற்றவரையும் அறவழியில் வாழ வைக்கும் இல்வாழ்க்கை தவ வாழ்க்கையை விட சிறந்தது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


துறவறத்தில் இருப்பவர், பசியால் வாடுபவர், ஆதரவற்றோருக்கு இல்லறத்தான் துணையாவான் . முன்னோர்கள், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தனது குடும்பத்தார், அனைவரையும் போற்றுவது இல்லறத்தான் கடமை. இத்தகைய இல்வாழ்வு வாழ்பவன் மற்ற யாவரினும் மேம்பட்டவன். அறநெறியுடன் வாழ்ந்து மற்றவர்களுக்கு பயனுள்ள வாழ்வு வாழ்பவர்கள் தெய்வமாக போற்றி மதிக்கப்படுபவர்கள். அன்பும் அறனும் கொண்டிருத்தல் வேண்டும். பாவங்களுக்கு அஞ்சி நல்ல வழியில் பொருள் சேர்க்க வேண்டும். இல்லாதவருடன் பகுத்துண்டு வாழ வேண்டும். சுற்றம் போற்ற வேண்டும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT