ADVERTISEMENT

தொப்பையை குறைப்பதற்கான வழிகள் - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

03:52 PM Aug 19, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

தொப்பையைக் குறைப்பதற்கான வழிகள் குறித்து சித்த மருத்துவர் அருண் விளக்குகிறார்

தொப்பை விழுந்த பிறகு தான் தங்களுக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்பதை உணரும் நிலையில் இன்று பலர் இருக்கின்றனர். இப்போது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கே தொப்பை இருக்கிறது. பொதுவாக நம்முடைய உழைப்பு என்பது இப்போது குறைந்துவிட்டது. படியில் கூட ஏறாமல் லிப்டைத் தான் நாம் பயன்படுத்துகிறோம். எந்தவிதமான உடற்பயிற்சியையும் இன்று நாம் மேற்கொள்வதில்லை. பள்ளிகளிலும் விளையாட்டு பீரியட் என்பதே இப்போது இல்லை.

உணவு இப்போது அனைவருக்கும் தேவையான அளவு கிடைக்கிறது. பட்டினி என்பது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். இப்போது நாம் நிறைய சாப்பிடுகிறோம். அந்தக் காலத்தில் தின்பண்டங்கள் கூட ஆரோக்கியமானவையாக இருந்தன. இப்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவுகளையே இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர். அனைவரின் வீடுகளுக்குள்ளும் இதுபோன்ற உணவுகள் இப்போது வந்துவிட்டன. உழைப்பு குறைந்ததால் உடல் பருமன் அதிகமாகிவிட்டது. தொப்பையும் வந்துவிட்டது.

வயிறு சுத்தமாக இருந்தால் தான் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். பேதி மருந்து கொடுத்து அவ்வப்போது வயிற்றை சுத்தம் செய்யும் முறை அப்போது இருந்தது. குறிப்பிட்ட வயதுக்கு மேல் சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று பேதி மருந்தை எடுத்துக்கொள்ளலாம். வீட்டிலேயே உள்ள சிறந்த மருந்து என்றால் அது விளக்கெண்ணெய் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை எடுத்துக்கொள்ளலாம். மலத்தை இலகுவாக்கக் கூடிய தன்மை இதற்கு இருக்கிறது. உணவிலேயே இதை நாம் பயன்படுத்த முடியும்.

அதிக அலைச்சலில் இருப்பவர்கள், உடல் சூடு அதிகம் இருப்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ தேவைக்கேற்ப விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். சுடுதண்ணி அல்லது பாலில் விளக்கெண்ணெய் கலந்து குடிக்கலாம். இதன்மூலம் நீர் நீராக பேதி வெளியேறும். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அதுவே நின்றுவிடும். இதன் மூலம் உடல் சூடு குறையும். குடலில் தங்கியிருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படும். குடல் சுத்தமாகும். தேவையற்ற வாயுக்கள் நீங்கும். இதன் மூலம் தொப்பையும் நிச்சயம் குறையும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT