ADVERTISEMENT

உங்கள் கம்ப்யூட்டர் உங்களை டென்ஷன் ஆக்குதா? இதைக் குத்துங்கள்...

06:54 PM Aug 09, 2018 | tarivazhagan

உலகம் சுருங்கி நம்ம கைக்குள்ள கணினியா வந்த பிறகு அலைச்சல், உடல் உழைப்பு எல்லாம் குறைஞ்சுருக்கு, ஆனால் 'ஸ்ட்ரெஸ்' அதிகமாயிடுச்சு. நமக்கு ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கும் இடங்களென்று பார்த்தால், ட்ராபிக் அதிகமா இருக்கும் பயணம், அதுக்கடுத்து நாம் வேலை செய்யுற அலுவலகம். இப்போதெல்லாம் கம்ப்யூட்டர் முன்னாடி உக்கார்ந்துதான் பெரும்பான்மையான வேலைகள் செய்யுறோம். அதனால், நம் வேலை நமக்குக் கொடுக்கும் ஸ்ட்ரெஸ் என்பது கம்ப்யூட்டர் வழியாகத்தான் வருகிறது. இதனால் கம்ப்யூட்டர் மேல் கோபமாகி அதைத் தூக்கி உடைப்பது போன்ற வீடியோக்கள் எல்லாம் பார்த்திருப்போம். உண்மையில் அப்படி நிகழ்ந்ததா என்பது தெரியவில்லை, ஆனால், தூக்கி துடைக்கவேண்டும் என்று தோன்றுகிற அளவுக்கு நமக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படுவது உண்மைதானே? அப்படி நிகழாமல் தடுக்க இப்போ நிறைய ஸ்ட்ரெஸ் பஸ்ட்டரும் வந்திருக்கு. இதனோட வேலை என்னனா, நம்ம ஸ்ட்ரெஸ் ஆகிற விஷயத்துல இருந்து, நம்மளுடைய கவனத்தை திசை திருப்பி, அதில் நமக்கு இருக்கிற ஸ்ட்ரெஸ்ஸைக் குறைப்பதுதான்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதுக்கு முன்னாடி வரை நமக்கு ஸ்ட்ரெஸ் இருந்தா என்ன பண்ணுவோம் ? ஒன்னு கத்துவோம், இல்ல சுவரைக் கையால் குத்துவோம். ஒரு வேளை ஆபீஸ்ல இருந்தா 'கீபோர்ட்'ல இருக்கிற என்டர் பட்டனைப் போட்டு அடிப்போம். இது எல்லாத்துக்கும் மாறாக இப்போ 'பிக் என்டர் கீ' அப்படினு ஒன்னு வந்திருக்கு. இதை நாம் 'யு.எஸ்.பி.' (USB) கேபிள் மூலமா நம்ம கம்பியூட்டர்ல கனக்ட் பண்ணிட்டா, நாம வேலை செய்யும்போது டென்ஷன் ஆனோம்னா அந்த 'என்டர் கீ'ய ஒரு அடி அடிக்கலாம். அது உடையாது, என்டர் கீ செய்ய வேண்டிய வேலையையும் செய்யும், நம்ம டென்ஷனையும் குறைக்கும்.

கம்ப்யூட்டரைத் தாண்டி நமது ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க ஸ்ட்ரெஸ் பால்கள் இருக்கின்றன. அந்த மஞ்சள் நிற ஸ்மைலி பந்துகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த ஸ்ட்ரெஸ் பால்களாலும் குறையாத ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க 'பன்ச்சிங் பேக்'னு ஒன்னு இருக்கு. இதை நம்ம வீட்டில் டென்ஷனா இருக்கும் போது குத்திக் குத்தி விளையாடலாம். இதை குத்தும் போது நம்மள டென்ஷன் பண்ணவங்களோட முகத்தில் குத்தற மாதிரி ஒரு ஃபீலிங்கும் கிடைக்கும், நமக்கும் டென்ஷன் குறையும், நம்மள சுத்தி வன்முறையும் குறையும். இன்னும் டீடைல்ஸ் வேணுமா... சும்மா யூ டியூபில் செக் பண்ணுங்க பாஸ்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT