ADVERTISEMENT

கிலோய் மூலிகையின் ஆறு அற்புத பலன்கள்..!

10:28 AM Feb 22, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அவசியம். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். ஏனென்றால், கிலோய் ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும். இது இந்திய மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு காலங்காலமாக, தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது மற்றும் பரிந்துரைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பெரும்பாலான வெளிநாடுகளிலும், இந்தியர்களால் அதிகமாகக் கொள்முதல் செய்யப்படுகிறது.

கிலோய் என்றால் என்ன?

கிலோய் என்பது மரங்களில் தொற்றிப் படரும் ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இதய வடிவில் இலை கொண்டிருக்கும் இந்தச் செடி, பல விநோன சக்திகளைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. சமஸ்கிருதத்தில், கிலோய் 'அமிர்தா' என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கிலோய்க்கு சீந்தில் (டினோஸ்போரா கார்டிபோலியா) அமிர்தவல்லி, சோமவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்கள் உண்டு.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

கிலோய் பல உடல்நலப் பிரச்சனைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய மிகவும் பயனுள்ள மற்றும் பல்துறை ஆயுர்வேத மூலிகையாகவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது உயிரியல் ரீதியாகச் செயல்படும் சேர்மங்கள், ஆல்கலாய்டுகள் மற்றும் லாக்டோன்களையும் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது மற்றும் நச்சுத்தன்மையை அகற்றி, இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. 'கிலோய்' இதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் வல்லுநர்களால் பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி உங்கள் செல்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.

கீல்வாதம்:

கிலோய் மூலிகையில், கீல்வாதத்திற்கு சிகிச்சையளிக்க உதவும் ஆர்த்ரைடிக் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும், இது மூட்டுவலிக்குச் சிறந்த மருந்தாகி உடலுக்குப் பல நன்மைகளை அளிக்கிறது. கிலோயில் மூட்டுவலி நீக்கம் மற்றும் அதன் பல அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஆர்த்ரிடிஸ் உள்ளவர்களுக்கு காணப்படும் முக்கிய அறிகுறிகளான விறைப்பு போன்றவற்றைக் குணப்படுத்த, தினமும் கிலோய் ஜூஸ் குடிப்பது சிறந்தது.

நீரிழிவு நோய்:

நீரிழிவு நோயாளிகள், கிலோய் (சீந்தில்) உட்கொள்வதால் பெரிதும் பயனடைவார்கள். 'கிலோய்' உங்கள் உடலில் இன்சுலின் உற்பத்தியின் அளவை நிர்வகிக்க உதவுகிறது. கிலோய் மூலம் அதிகப்படியான குளுக்கோஸை எரிக்கவும், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கவும் முடியும். நீரிழிவு என்பது உங்கள் உடலின் இன்சுலின் அளவைக் குறைக்கும் ஒரு நிலை. இது, பொதுவாக நடுத்தர வயது முதல் முதியவர்கள் வரை காணப்படுகிறது. கிலோயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவை, இரத்தச் சர்க்கரை குறைப்பானாகச் செயல்பட்டு நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. கிலோய் சாறு அதிக அளவு இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது:

மாறிவரும் நவீன வாழ்க்கை முறையில், சரியான உணவுப் பழக்கத்தைப் பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. ஒழுங்கற்ற வாழ்க்கை முறை பிரச்சனைகள் காரணமாக, நம்மில் பெரும்பாலோர் மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தால் பாதிக்கப்படுகிறோம். இதுபோன்ற கடினமான சூழ்நிலையில், கிலோய் மூலிகை எடுத்துக்கொள்வது உடலின் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

சுவாச பிரச்சனைகள்:

கிலோய் மூலிகை சுவாசப் பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது, அழற்சி எதிர்ப்பு நன்மைகளுக்குக் காரணமாக இருப்பதால் சளி, இருமல் போன்ற சுவாசப் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. கிலோயில் இருக்கும் அதிக மருத்துவ குணங்கள், நமக்கு நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, எந்தப் பக்கவிளைவும் இல்லாமல் கிலோய் மூலிகை அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்றாகும்.

நாள்பட்ட காய்ச்சல்:

கிலோய் மூலிகைக்கு எந்தப் பக்க விளைவுகளும் இல்லாததால், டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் மலேரியா போன்றவற்றிற்கு உதவுவதற்காக இந்த மூலிகையானது வழங்கப்படுகின்றது. இது இயற்கையிலேயே உடல் வெப்பத்தணிப்பைக் குறைப்பதால் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை உயர்வாக வைத்திருக்க உதவுகிறது.

கிலோய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகையாக இருப்பினும், நீங்கள் இதை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடனே உட்கொள்வது அவசியம். நாள் ஒன்றுக்கு 20 மில்லி (ML) கிலோய் சாறுக்கு (பொடியாக இருப்பின் 5 கிராம்) மேல் உட்கொள்ளக்கூடாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், நீங்கள் கர்ப்பமாக அல்லது தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தாலோ, கருத்தரிப்புக்கு முயற்சிப்பவராக இருந்தாலோ இதனை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT