ADVERTISEMENT

10 நிமிடத்தில் பளபளப்பாக மாற இதை செய்தால் போதும்..!

12:42 PM Oct 17, 2019 | suthakar@nakkh…

ஒருவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவர்கள் முகத்தில் முகப்பருக்கள் வந்தால் அவர்களின் பொலிவு இயல்பாகவே குறையும். அந்த வகையில் முகப்பருக்களுக்கு டாட்டா சொல்ல முக்கிய மருத்துவ பொருள் நம் அனைவரின் வீடுகளிலும் உள்ள கடுகு எண்ணெய். இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்க்கலாம். கடுகு எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்கி சிறிதளவு உப்பு சேர்த்து முகத்தில் தடவி, 10 நிமிடம் முகத்தை மென்மையாக மசாஜ் செய்துவிட வேண்டும். நாம் செய்வதை விட நண்பர்கள் உதவியுடன் செய்யும் போது பலன் அதிகம் கிடைக்கும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அப்படி செய்து வந்தால் முகம் வெண்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

மேலும் பருக்களால் ஏற்பட்ட புள்ளிகளை நீக்க, கடலை மாவுடன் தயிர் மற்றும் கடுகு எண்ணெய்யை சேர்த்து அவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து புள்ளிகள் உள்ள இடங்களில் பூசி, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர ஒரு வாரத்தில் அந்த புள்ளிகள் இருந்த இடம் காணமல் போகும். கடுகு எண்ணெய் இல்லை என்றால் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம் என்று சிலர் கூறுவதும் உண்டு. அது முற்றிலும் தவறான ஒன்று. ஆலிவ் எண்ணெய் நரம்புகளுக்கு புத்துணர்வு தரும் என்பதே உண்மை. அதற்கு பருக்களை குணப்படும் தன்மை இல்லை என்பதே எதார்த்தம். எனவே அதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT