ADVERTISEMENT

டென்சன் தலைவலியை சரி செய்வது எப்படி? - ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்கம்

06:41 PM Sep 07, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

டென்ஷன் தலைவலி குறித்தும் அதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்குகிறார்

தசை இறுக்கம் போன்ற உடல் சார்ந்த காரணங்களால் நெற்றியில் இந்த தலைவலி ஏற்படும். அந்த நேரத்தில் தலையில் அதீத அழுத்தம் இருக்கும். தலையில் எதையோ இறுக்கமாக கட்டிவிட்டது போல் வலி இருக்கும். மன அழுத்தமும் இதற்கான முக்கியமான ஒரு காரணம். நம்மை அறியாமலேயே நம்முடைய உடலுக்குள் நிறைய எமோஷன்கள் இருக்கும். அவை உச்சத்தை அடையும்போது இந்த தலைவலி ஏற்படும். சிலருக்கு மது குடித்தால் கூட அதீதமான தலைவலி ஏற்படும். அதனால் தான் ஆல்கஹால், காபி உள்ளிட்டவற்றை மிகவும் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாம் சொல்கிறோம்.

இன்று அனைத்து வயதினருக்கும் வெவ்வேறு வகைகளில் மன அழுத்தம் இருப்பதால் இந்த பிரச்சனை அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது என்பதே உண்மை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு ஒவ்வொரு வகையான அழுத்தம் இருக்கும். அதை நாம் எப்படிக் கையாளுகிறோம் என்பது தான் முக்கியம். அந்தந்த நேரங்களுக்கு ஏற்றவாறு நம்முடைய வாழ்க்கை முறையை நாம் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். இதை நாம் செய்தால் இந்த தலைவலியை நம்மால் எளிதாகக் கையாள முடியும். தீர்வுகளை நோக்கி நகர்வதே சிறப்பான அணுகுமுறை.

வாழ்க்கையை எந்த வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய முடிவில் தான் இருக்கிறது. மன அழுத்தம் காரணமாக தவறான பாதைக்குச் சென்றால் அந்த நேரத்தில் அது நன்றாக இருக்கும். ஆனால் வருங்காலத்தில் அது நமக்கும் நம்முடைய சமுதாயத்துக்கும் நிச்சயம் பாதகத்தையே ஏற்படுத்தும். இந்த தலைவலிக்கு சிகிச்சை பெறுவது தான் சிறந்த நடைமுறையாக இருக்கும். இல்லையெனில் இது தொடர்ந்துகொண்டே இருக்கும். சில தலைவலிகள் குறைந்த காலத்திற்கே இருக்கும். ஆனால் அதிக காலம் நிலைத்திருக்கும் நாள்பட்ட தலைவலி ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT