ADVERTISEMENT

பெண்களின் சிறுநீர் கசிவிற்கு தீர்வு - டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் விளக்கம்

12:56 PM Sep 14, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெண்களின் சிறுநீர் கசிவு பிரச்சனைகள் குறித்தும், அதை சரி செய்யும் விதம் குறித்தும் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் விளக்குகிறார்

இருமல், தும்மல், குனிந்து பளுதூக்குதல் போன்ற வயிற்றுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலைகளைச் செய்யும்போது பெண்களுக்கு அவர்களை அறியாமல் சிறுநீர் கசிவு ஏற்படும். அடக்க முடியாத சிரிப்பு ஏற்படும்போது கூட சிறுநீர் கசிவு ஏற்படும். இது திடீரென்று நடக்கும்போது அதை அவர்கள் அவமானமாக உணர்வார்கள். நடுத்தர வயது பெண்களுக்கே இந்தப் பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. உடல் பருமனும் இதற்கான முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது. நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களுக்கு தசைகள் பலவீனமாகும். அவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும்.

அவர்களுக்கு அனைத்து வகையான பரிசோதனைகளையும் நாம் மேற்கொள்வோம். அவர்கள் மருத்துவரிடம் சொல்வது குறைவாகவே இருக்கும். ஆனால் பரிசோதனை செய்யும்போது தான் அவர்களுக்கு எத்தனை பிரச்சனைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். எனவே முழுமையான பரிசோதனை அவசியம். உடல் பருமனைக் குறைப்பது முக்கியமான ஒரு தீர்வாக இருக்கும். கர்ப்ப காலத்திலிருந்தே பெண்கள் சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறப்புறுப்பை நன்கு உள்ளே இழுத்து, ஐந்து வரை எண்ண வேண்டும்.

பலர் இப்படிப்பட்ட பயிற்சிகளை செய்வதில்லை. மறதியும் வேலைப்பளுவும் இதற்கான காரணமாக இருக்கிறது. இதுகுறித்து தங்களுக்கு நினைவூட்டும் வழிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு பயிற்சிக்கும் அடுத்த பயிற்சிக்கும் இடையில் சரியான இடைவெளி விட வேண்டும். உங்களுடைய சாதாரண பணிகளுக்கு நடுவிலேயே இந்தப் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம். இதன் மூலம் சிறுநீர் கசிவு பிரச்சனைக்கு முடிவுகட்டலாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT