Skip to main content

பிசிஓடி வந்தால் செய்ய வேண்டியவை!

 

What to do if you get PCOD!

 

பிசிஓடி என்ற மாதவிடாய் சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை டாக்டர் கிருத்திகா அவர்களிடம் கேட்டோம். அவர் அளித்த விவரம் பின்வருமாறு...

 

பிசிஓடி பிரச்சனை மன அழுத்தத்தாலும் உருவாகிறது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது செக்ஸ் மீதான ஆர்வமும் குறையும். சரியான உணவு முறை, நல்ல தூக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மன அழுத்தத்தில் இருந்து நாம் அனைவரும் விடுபட முடியும். உங்கள் குழந்தைகளை இரவு 10 மணிக்குள் தூங்க வைத்து விட வேண்டும். கல்வி மற்றும் பிற காரணங்களுக்காக குழந்தைகளைத் துன்புறுத்துவதை நாம் நிறுத்த வேண்டும். துரித உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதை நாம் தவிர்க்க வேண்டும்.

 

இயற்கையான காய்கறிகள், மட்டன், சிக்கன், மீன், நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி முட்டை உள்ளிட்டவற்றை நன்கு சுத்தம் செய்து சாப்பிட வேண்டும். இனிப்பு சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாகவே பிசிஓடி உள்ளிட்ட குறைபாடுகளைப் பெருமளவில் தவிர்க்க முடியும். பிரட் போன்றவற்றிலும் பிரசர்வேட்டிவ் பயன்படுத்தி அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கின்றனர். அது போன்ற நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. அதுவெல்லாவற்றையும் விட நாம் உட்காருவதற்காகப் பிறக்கவில்லை. ஓடியாடத்தான் பிறந்திருக்கிறோம். எனவே உடலில் தொடர்ந்து மூவ்மெண்ட் இருக்க வேண்டும்.  அப்படி வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !