ADVERTISEMENT

கரோனாவால் 'குடி'மகன்களுக்கு வரும் பிரச்சனை... மருத்துவர் தரும் தீர்வு!

11:10 AM Mar 31, 2020 | suthakar@nakkh…

கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனைக் குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

ADVERTISEMENT



இது ஒருபுறம் என்றால் இதனால் மது குடிப்பவர்களுக்கு மனதளவில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மனநல மருத்துவர் ஷாலினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, " மது குடிப்பவர்களுக்கு தனிமை, மன பதட்டம் முதலியவை அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொடர்ந்து மது குடித்து வந்தவர்கள் திடீரென அதனை நிறுத்துவதால் அவர்களுக்கு இந்தப் பாதிப்புக்கள் இயல்பாகவே வந்துவிடுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் கோபம் வர வாய்ப்பிருப்பதால் அவர்களிடம் யாரும் அதிகம் பேச வேண்டாம். அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இளநீர், கரும்பு சாறு, பழச்சாறு முதலியவற்றைத் தொடர்ந்து கொடுக்கலாம். இது எதற்கும் வழி இல்லை என்றால் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சக்கரை கலந்து தொடர்ந்து குடிக்கலாம். இது அவர்கள் உடல்நலத்திற்கு நன்மையாக இருக்கும்" என்றார்

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT