ADVERTISEMENT

'செகண்ட் ஹனிமூன் போங்க...' - குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு மருத்துவரின் அட்வைஸ்   

03:24 PM Oct 30, 2018 | vasanthbalakrishnan

அதிகரித்து வரும் குழந்தையின்மை குறித்தும் அதை வைத்து நடக்கும் வணிகம் குறித்தும் 'அதித்ரி' கருத்தரிப்பு மையத்தின் மூத்த மருத்துவர் ரஜினியிடம் நாம் பேசியதன் தொடர்ச்சி...

ADVERTISEMENT



முன்பெல்லாம் குழந்தை இல்லை என்றால் அது பெண்ணின் பிரச்னை என்று பெண்கள் தலையில் கட்டிவிடுவார்கள். பெண்களே பாதிக்கப்படுவார்கள். ஆனால், இப்பொழுது ஆண்கள் பக்கம் இருக்கும் குறைபாடுகளை உணர்ந்து, வெளிவருகிறார்கள். இது ஒரு நல்ல மாற்றம்தான். அதுபோல, முன்பு திருமணம் நடந்து முடிந்தால் அடுத்தது குழந்தை என்ற மனநிலையே பெரும்பாலானவர்களிடம் இருந்தது. தற்போது, இளம் தம்பதிகளிடம் அந்த மனநிலை மாறி, 'முதலில் ஒரு வீடு, கார், நிறைவான வேலை ஆகியவற்றை அடைத்துவிட்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்' என்ற எண்ணமோ அல்லது 'ஒரு வருடம் இருவரும் கொஞ்சம் ஜாலியா என்ஜாய் பண்ணலாம், அப்புறம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்' என்ற எண்ணமோ இருக்கிறது. இதில் தவறில்லை. ஆனால், மூத்த தலைமுறை இன்னும் மாறவில்லை. அவர்கள் இதற்கெல்லாம் காத்திருப்பதில்லை. 'பேரன் வேண்டும், பேத்தி வேண்டும்' என்று எதிர்பார்க்கிறார்கள். இவர்களிடம் கேட்கிறார்கள், இதனால் இவர்களுக்கு ஒரு பிரஷர் ஏற்படுகிறது. குழந்தைக்காக முயன்றும் அது உடனே நிகழாவிட்டால் அது ஸ்ட்ரெஸ் ஆக மாறுகிறது.

எங்களிடம் வருபவர்கள் பெரும்பாலும் ஒரு மன அழுத்தத்துடன்தான் வருகிறார்கள். நாங்க அவர்களை நேரடியாக சிகிச்சைக்கு உட்படுத்துவதில்லை. சிலரெல்லாம் வந்தவுடன் 'எனக்கு IVF பண்ணுங்க மேடம்' என்று நேரடியாகவே கேட்பார்கள். நாங்க அப்படியெல்லாம் செய்வதில்லை. முதலில் அவர்களது ஸ்ட்ரெஸ் லெவலை தெரிந்துகொள்வோம். அவுங்களுக்கு கவுன்சிலிங் கொடுப்போம். பேசிக் ட்ரீட்மெண்ட் பண்ணலாமா, அவுங்களுக்கு ஏற்றது போல காஸ்ட் எஃபக்டிவ்வா எப்படி பண்ணலாம் என்றெல்லாம் அவர்களிடம் பேசுவோம். அவங்க டென்ஷனை குறைத்து நம்பிக்கையை அதிகரிப்போம். படிப்படியாகத்தான் சிகிச்சையை கொண்டுசெல்வோம்.

ADVERTISEMENT



சிலர் கேப்பாங்க, 'நான் பெட் ரெஸ்ட் எடுக்கணுமா?'னு. அப்படியெல்லாம் இல்லை, நார்மல் லைஃப் இருக்கணும். எக்ஸர்சைஸ் பண்ணலாம், ஜாகிங் போகலாம். மனசு ஃப்ரீயா இருக்கணும். சிகிச்சைக்கு இடையில் இடைவெளி விடுவோம். ஒரு செகண்ட் ஹனிமூன் போங்க, வேலை அழுத்தத்தில் இருந்து கொஞ்சம் வெளிய வாங்க'னு சொல்லுவோம்.எமோஷனலா அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவோம். அவுங்க வேலைக்கு ஏற்ற மாதிரி சிகிச்சையை பிளான் பண்ணுவோம். இந்த நாள், இந்த நேரம்தான் வரணும் என்றெல்லாம் இறுக்கமாக நடக்கமாட்டோம்.



இதெல்லாம் சேர்ந்துதான் நல்ல ரிசல்ட் கொடுக்கும். ஏன்னா, உடல் மட்டும் இல்லை, அதைத் தாண்டி மனமும் சம்மந்தப்பட்டதுதான் குழந்தைப்பேறு. நாங்களும் அவுங்களுக்கு பிரஷர் கொடுக்கமாட்டோம். பொய் நம்பிக்கை கொடுக்கக்கூடாது. உண்மையான நிலையை சொல்லுவோம். இப்படித்தான் எந்த மருத்துவமனை என்றாலும் நடக்கணும். தம்பதிகளும் நல்ல மருத்துவமனைக்குப் போகணும், மருத்துவரை நம்பணும். எல்லா வகையிலும் முயற்சித்துவிட்டு, முடியாத நிலை வரும்போது ஒரு மருத்துவர் தத்தெடுப்பதை பரிந்துரைப்பார். அதை நம்பாமல் விளம்பரங்கள் பார்த்து அடுத்த இடத்துக்குச் சென்றால், மீண்டும் முதலில் இருந்து தொடங்கி, இதே முடிவைத்தான் தருவார்கள்.

டாக்டரிடம் பேசப்பேச ஒரு பெரிய தெளிவு கிடைக்கிறது. குழந்தை இல்லையென்று தம்பதிகள் அடையும் பதற்றம் முதலில் குறைய வேண்டும். சரியான இடத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

மருத்துவர் ரஜினி நேர்காணலின் இன்னொரு பகுதி...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT