Skip to main content

இது பேசவேண்டிய நேரம்... - 'அதித்ரி' ஒருங்கிணைக்கும் 'என் பெண்... என் பெருமை' கருத்தரங்கு 

Published on 13/08/2018 | Edited on 16/08/2018

மதசார்பின்மை, ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றம், சுற்றுச்சூழல், விவசாயம் என பேசப்படவேண்டிய விஷயங்கள் சமீபமாக பேசப்பட்டு வருகின்றன. இது மகிழ்ச்சி. அதே நேரம் முக்கியமான விஷயமான பெண்கள் பாதுகாப்பு, உரிமை பேசப்படவேண்டியதாக, சமீபகாலமாக ஆரோக்கியமாக பேசப்படாமல் இருக்கிறது. பல காலமாக இது பேசப்பட்டாலும் பெரும்பாலும் ஆவேச பேச்சாகவே இருந்திருக்கிறது. அதை ஆரோக்கியமாக பேச ஒரு கருத்தரங்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
 

adhithri my girl my pride



பில்ரோத் மருத்துவமனை சார்பில் எழும்பூரில் உள்ள 'ராடிசன்' ஹோட்டலில் 'மை கேர்ள் மை பிரைட்' (My Girl, My Pride)  கருத்தரங்கம் நாளை (14 ஆகஸ்ட் 2018) மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகையும் இயக்குனருமான ஸ்ரீப்ரியா, திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனருமான அறிவழகன் வெங்கடாசலம்,  ஃபென்சிங் விளையாட்டில் உலகளவில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் பவானி தேவி, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ வல்லுநரான வி. ரஜினி, நேச்சுரல்ஸ் ஸ்பா மற்றும் சலூனின் தலைமை செயல் அலுவலர் சி.கே. குமரவேல் ஆகியோர் பங்கேற்று விவாதிக்கின்றனர்.

பெண்களின் பாதுகாப்பு, பொருளாதார தற்சார்பு, கல்வி, ஆரோக்கியம் உள்பட பல பரிமாணங்களில் தற்போதைய நிலை குறித்தும் நிகழ வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பங்கேற்பவர்கள் பேசவிருக்கின்றனர். நிகழ்வில் பேசும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பெண்கள் உரிமைக்காக பங்களித்துள்ளனர். நடிகை ஸ்ரீப்ரியா தொடர்ந்து பெண்கள் உரிமை, முன்னேற்றம் போன்ற விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருபவர். மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் செயலாற்றுபவர். இயக்குனர் அறிவழகன் தனது குற்றம் 23 திரைப்படத்தின் மூலம் சில செயற்கை கருவுற்றல் மையங்களின் மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர். அவரது திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்கள் தங்களுக்குரிய கண்ணியத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். பவானி தேவி, ஃபென்சிங் எனப்படும் வாள்வீச்சு போட்டியில் உலக அளவில் தொடர்ந்து முதல் 50 இடங்களுக்குள் இருப்பவர், மருத்துவர் ரஜினி பில்ரோத் மருத்துவமனையின் கருத்தரிப்பு மைய தலைவர். குழந்தையின்மையை ஒரு பெரும் குறையாக உருவாக்கம் செய்து பெண்களை குற்றவுணர்வுக்கு ஆளாக்கி வியாபாரம் செய்யும் பல மருத்துவர்கள் மத்தியில் அதை எளிதாக்கி, தேவையான சிகிச்சை முறைகளை மட்டும் செய்து ஒரு வழிகாட்டியாக திகழ்பவர். கீர்த்தி ஜெயக்குமார், ஒரு பெண்ணுரிமை செயல்பாட்டாளர், எழுத்தாளர். நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான (CEO) சி.கே.ஜெயக்குமார் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு சுய தொழில் தொடங்கும் வாய்ப்பை தன் நிறுவனம் மூலம் அளித்துள்ளவர்.

 

kalpana rajesh



"இவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேசும் இந்தக் கருத்தரங்கு இதோடு நின்றுவிடாது, அடுத்தடுத்த செயல்பாடுகளை நோக்கி நகரும். பெண்கள் உரிமை. அதிகாரம் குறித்து இப்பொழுதே சத்தமாக, ஆக்கபூர்வமான முறையில் பேசத் தொடங்கவேண்டும். பெண்கள் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குள்ளாகி வரும் நிலையில் இது மிகவும் அவசியம். நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்" என்கிறார் பில்ரோத் மருத்துவமனையின்  தலைமை செயல் அலுவலரான (CEO)  மருத்துவர் கல்பனா ராஜேஷ். இவர் மகப்பேறு மையங்கள் என்ற பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் சில நிறுவனங்களின் தாக்கத்தைக் கண்டு, அதை  எளிதாக்க 'அதித்ரி' என்ற கருத்தரிப்பு மையத்தை தொடங்கியுள்ளார். அதித்ரி மையத்தின் தொடக்க விழாவில் பில்ரோத் மருத்துவமனை மேலாண் இயக்குனர் மருத்துவர் ராஜேஷ் ஜெகநாதன் பேசியது நெகிழ்ச்சி தரும் உரை.

ஆம், பேசப்பட வேண்டும்... பேசப்படும் விஷயங்கள்தான் செயல்பாடாக மாறும். எத்தனையோ விஷயங்கள் சமீபமாக பேசப்பட தொடங்கியுள்ளன. மிக மிக அவசியமான பெண்கள் பாதுகாப்பு, உரிமை, அதிகாரம்... இவையும் பேசப்படவேண்டும். பேசுபவர்களுக்கு வாழ்த்துகள்.                       
 


 

   

சார்ந்த செய்திகள்

Next Story

15 நாட்களில் 15 தொகுதிகளுக்குப் பயணிக்கும் மேமோகிராஃபி வேன்; பெண்கள் நலனுக்கு முதல்வர் தொடங்கிவைத்த திட்டம்...

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

 

பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் மாதத்தை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. ‘பிங்க் அக்டோபர்’ என அழைக்கப்படும் இம்மாதத்தில், உலகம் முழுவதும் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புற்றுநோய் கண்டறிதல் சோதனைகளை மேற்கொள்ளவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்தவகையில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி, தமிழக அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய 'வரும் முன் காப்போம்' திட்டத்தின் மூலம் சென்னையில் பில்ரோத் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்வு இன்று நடத்தப்பட்டது. 

 

கொளத்தூர் மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல்வர், மு.க. ஸ்டாலின் பங்கேற்று, பில்ரோத் மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்ட மொபைல் அல்ட்ராசவுண்ட் மேமோகிராஃபி வேனை கொடியசைத்துத் துவங்கி வைத்தார். இந்த மேமோகிராஃபி வேன் மூலம், அடுத்த 15 நாட்களில் தமிழகத்தின் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்று, 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குப் புற்றுநோய் சோதனைகள் மேற்கொள்வது, நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றை மருத்துவ குழுவினர் செய்ய உள்ளனர். கொளத்தூரில் நடைபெற்ற இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம், எம்.ஆர். சேகர்பாபு மற்றும் பில்ரோத் மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜேஷ் மற்றும் டாக்டர் கல்பனா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

Next Story

'செகண்ட் ஹனிமூன் போங்க...' - குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு மருத்துவரின் அட்வைஸ்   

Published on 30/10/2018 | Edited on 01/12/2018

அதிகரித்து வரும் குழந்தையின்மை குறித்தும் அதை வைத்து நடக்கும் வணிகம் குறித்தும் 'அதித்ரி' கருத்தரிப்பு மையத்தின் மூத்த மருத்துவர் ரஜினியிடம் நாம் பேசியதன் தொடர்ச்சி...

 

dr.rajini adhithri



முன்பெல்லாம் குழந்தை இல்லை என்றால் அது பெண்ணின் பிரச்னை என்று பெண்கள் தலையில் கட்டிவிடுவார்கள். பெண்களே பாதிக்கப்படுவார்கள். ஆனால், இப்பொழுது ஆண்கள் பக்கம் இருக்கும் குறைபாடுகளை உணர்ந்து, வெளிவருகிறார்கள். இது ஒரு நல்ல மாற்றம்தான். அதுபோல, முன்பு திருமணம் நடந்து முடிந்தால் அடுத்தது குழந்தை என்ற மனநிலையே பெரும்பாலானவர்களிடம் இருந்தது. தற்போது, இளம் தம்பதிகளிடம் அந்த மனநிலை மாறி, 'முதலில் ஒரு வீடு, கார், நிறைவான வேலை ஆகியவற்றை அடைத்துவிட்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்' என்ற எண்ணமோ அல்லது 'ஒரு வருடம் இருவரும் கொஞ்சம் ஜாலியா என்ஜாய் பண்ணலாம், அப்புறம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்' என்ற எண்ணமோ இருக்கிறது. இதில் தவறில்லை. ஆனால், மூத்த தலைமுறை இன்னும் மாறவில்லை. அவர்கள் இதற்கெல்லாம் காத்திருப்பதில்லை. 'பேரன் வேண்டும், பேத்தி வேண்டும்' என்று எதிர்பார்க்கிறார்கள். இவர்களிடம் கேட்கிறார்கள், இதனால் இவர்களுக்கு ஒரு பிரஷர் ஏற்படுகிறது. குழந்தைக்காக முயன்றும் அது உடனே நிகழாவிட்டால் அது ஸ்ட்ரெஸ் ஆக மாறுகிறது.

எங்களிடம் வருபவர்கள் பெரும்பாலும் ஒரு மன அழுத்தத்துடன்தான் வருகிறார்கள். நாங்க அவர்களை நேரடியாக சிகிச்சைக்கு உட்படுத்துவதில்லை. சிலரெல்லாம் வந்தவுடன் 'எனக்கு IVF பண்ணுங்க மேடம்' என்று நேரடியாகவே கேட்பார்கள். நாங்க அப்படியெல்லாம் செய்வதில்லை. முதலில் அவர்களது ஸ்ட்ரெஸ் லெவலை தெரிந்துகொள்வோம். அவுங்களுக்கு கவுன்சிலிங் கொடுப்போம். பேசிக் ட்ரீட்மெண்ட் பண்ணலாமா, அவுங்களுக்கு ஏற்றது போல காஸ்ட் எஃபக்டிவ்வா எப்படி பண்ணலாம் என்றெல்லாம் அவர்களிடம் பேசுவோம். அவங்க டென்ஷனை குறைத்து நம்பிக்கையை அதிகரிப்போம். படிப்படியாகத்தான் சிகிச்சையை கொண்டுசெல்வோம்.

 

couple



சிலர் கேப்பாங்க, 'நான் பெட் ரெஸ்ட் எடுக்கணுமா?'னு. அப்படியெல்லாம் இல்லை, நார்மல் லைஃப் இருக்கணும். எக்ஸர்சைஸ் பண்ணலாம், ஜாகிங் போகலாம். மனசு ஃப்ரீயா இருக்கணும். சிகிச்சைக்கு இடையில் இடைவெளி விடுவோம். ஒரு செகண்ட் ஹனிமூன் போங்க, வேலை அழுத்தத்தில் இருந்து கொஞ்சம் வெளிய வாங்க'னு சொல்லுவோம்.எமோஷனலா அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவோம். அவுங்க வேலைக்கு ஏற்ற மாதிரி சிகிச்சையை பிளான் பண்ணுவோம். இந்த நாள், இந்த நேரம்தான் வரணும் என்றெல்லாம் இறுக்கமாக நடக்கமாட்டோம்.

 

adhithri



இதெல்லாம் சேர்ந்துதான் நல்ல ரிசல்ட் கொடுக்கும். ஏன்னா, உடல் மட்டும் இல்லை, அதைத் தாண்டி மனமும் சம்மந்தப்பட்டதுதான் குழந்தைப்பேறு. நாங்களும் அவுங்களுக்கு பிரஷர் கொடுக்கமாட்டோம். பொய் நம்பிக்கை கொடுக்கக்கூடாது. உண்மையான நிலையை சொல்லுவோம். இப்படித்தான் எந்த மருத்துவமனை என்றாலும் நடக்கணும். தம்பதிகளும் நல்ல மருத்துவமனைக்குப் போகணும், மருத்துவரை நம்பணும். எல்லா வகையிலும் முயற்சித்துவிட்டு, முடியாத நிலை வரும்போது ஒரு மருத்துவர் தத்தெடுப்பதை பரிந்துரைப்பார். அதை நம்பாமல் விளம்பரங்கள் பார்த்து அடுத்த இடத்துக்குச் சென்றால், மீண்டும் முதலில் இருந்து தொடங்கி, இதே முடிவைத்தான் தருவார்கள்.

டாக்டரிடம் பேசப்பேச ஒரு பெரிய தெளிவு கிடைக்கிறது. குழந்தை இல்லையென்று தம்பதிகள் அடையும் பதற்றம் முதலில் குறைய வேண்டும். சரியான இடத்தை நோக்கிச் செல்ல வேண்டும். 

மருத்துவர் ரஜினி நேர்காணலின் இன்னொரு பகுதி...