ADVERTISEMENT

‘விட்டமின் டி’ நீரிழிவு நோய்க்கு மருந்தாக அமையும்... ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு...!

03:50 PM Jan 31, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இன்று புற்றுநோய்க்கு அடுத்தபடியாக அதிகமாக மக்களை அச்சுறுத்தி வரும் நோய் நீரிழிவு நோய். இதில் இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் ஒரு ஆய்வு சொல்லுகிறது. இதற்கு எத்தனையோ வகையான மருந்துகள் இருந்தும், நோய் வந்தப் பிறகு கட்டுப்படுத்த முடியுமே தவிர அதனை முழுவதும் தடுப்பதற்கென இதுவரை எந்த மருந்தும் இல்லை.

நீரிழிவு நோய் என்பது மனித உடலில் வயிற்றுக்கு பின் பக்கம் இருக்கும் கணையம் எனும் பகுதியிலிருந்து முறையாக இன்சுலின் சுரக்காமல் தடைபடும்போது குளுக்கோஸின் அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

நீரிழிவு நோயில், டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகைகள் உண்டு. இதில் டைப் 1 என்பது, கணையத்திலிருந்து முற்றிலும் இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படும் குறைப்பாட்டால் ஏற்படுவது. டைப் 2 என்பது, கணையத்திலிருந்து போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படுவது. இதில் இந்தியாவில் அதிகமானோர் டைப் 2 வகையான நீரிழிவு நோயால்தான் பாதிக்கப்படுகிறார்கள் என ஒரு ஆய்வு சொல்லுகிறது.

தற்போது இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள 'வட அமெரிக்கன் மெனோபாஸ் சொசைட்டி' எனும் அமைப்பு, டைப் 2 சார்ந்த நீரிழிவு நோய் சம்மந்தமாக நடத்தப்பட்ட ஆய்வில் ‘விட்டமின் டி’ எடுத்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என தெரியவந்துள்ளது. ஆனால், இது மட்டுமே முழுமையான தீர்வு இல்லை எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விட்டமின் டி எடுத்துக்கொள்வதன்மூலம் கணையத்தின் செயல்பாட்டை அதிகப்படுத்த முடியும் என்றும் அதனால் இன்சுலின் அதிகம் சுரக்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சுலின் அதிகமாக சுரக்க தொடங்கிவிட்டால் முடிந்த அளவுக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள் வந்துவிடும். அதனால் இந்த ஆய்வின் முடிவு விட்டமின் டி மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கிறது. மேலும் விட்டமின் டி என்பது எலும்புகளுக்கு முக்கியமானது என்பதும் இது சாதாரணமாக, இயற்கையாக சூரிய ஒளியில் இருந்தே நாம் பெறக்கூடியது என்பது இனிப்பான செய்தி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT