ADVERTISEMENT

தயிர் சாப்பிட்டால் நல்லதா?

02:15 PM Feb 06, 2019 | Anonymous (not verified)

நம்மில் ஒரு சிலர் தயிரை விரும்பி சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள் ஒரு சிலர் தயிரா ஐயோ வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள் .சரி தயிர் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதா இல்ல தீங்கு வரக்கூடியதா என்று பார்க்கலாம் .தயிர் சாப்பிடுபவர்களின் இரைப்பை குடல் பகுதிகள் சிறப்பான நிலையில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாது, அல்லது இடுப்புப் பகுதிகள் சுருங்கி விடும் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் தயிரில் உள்ள லேக்டோபாசிலி தான் என்றும் நம்புகின்றனர்.

ADVERTISEMENT

ஆனால், லேக்டோபசிலி மனிதனின் குடல் பகுதியிலேயே அமைந்துள்ளன. இந்த பாக்டீரியாக்களை குடல்பகுதியில் வாழும் பாக்டீரியாக்கள் என்று அழைக்கிறோம். வெளிப்பகுதியிலிருநுது பாக்டீரியா அல்லது வைரஸ்கள் வந்தால், அதனைத் தாக்கி அழிக்கும் தற்காப்பு அமைப்பு மனித உடலில் உள்ளது. உடலுக்கு நன்மை அளிக்கும் பாக்டீரியாக்கள் இருந்தால் கூட அந்த அமைப்பு அழித்துவிடும். இதேபோல தான், லேக்டோபசிலி பாக்டீரியா, உடலின் குடல் பகுதியில் இல்லாமல், வேறு பகுதிகளில் இருந்தால், அவை அழிக்கப்பட்டுவிடும். தயிரில் லேக்டோஸ்கள் அதிக அளவில் உள்ளன. எனவே, நீங்கள் தயிரை சாப்பிட்டால், லேக்டோஸ் நொதிகள் கிடைக்காமல், அஜீரணம் ஏற்படும். அதாவது, தயிரை சாப்பிடும் பலருக்கு சிறிய அளவில் வயிற்றுப்போக்கு ஏற்படும். மலக்குடலில் தேங்கி நிற்கும் மலம், இதன்மூலம் வெளியேறும். இதனால் மலச்சிக்கலை தயிர் போக்குவதாக தவறாக கருதப்படுகிறது.

ADVERTISEMENT


நாள்தோறும் தயிரை சாப்பிடும்போது, மலம் மற்றும் வாயு நாற்றமடிக்கும். இதன்மூலம், குடல் பகுதி சூழ்நிலை மோசமாகி விட்டதாக அறியலாம். மலக்குடல் பகுதியில் நச்சுப்பொருட்கள் உருவாவதே நாற்றம் வருவதற்கு காரணமாகும். தயிரை சாப்பிடுவதால், உடலுக்கு நல்லது என்று பொதுமக்கள் தெரிவித்து வந்தாலும், உண்மையில், உடலுக்கு தயிர் ஏற்றதல்ல. நாம் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வயதுக்கு வந்துவிட்டோம். மற்றவர்கள் தெரிவிக்கும் தகவல்களை நம்பிக் கொண்டிருக்காமல், நமது சொந்த உடலை சோதனை செய்து அதன்மூலம், உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT