
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றுகுறைவாக இருந்து வந்த சூழலில், கடந்த சில நாட்களாக நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றின் சதவீதம் 6.01 ஆக உயர்ந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு புதுச்சேரியில் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் 100% தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், அனைத்து கல்வி மற்றும் கல்லூரி நிறுவனங்களும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், பொதுமக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)