ADVERTISEMENT

உலகப் புகழ்பெறும் பெண்கள் யார்?

05:29 PM Mar 07, 2019 | Anonymous (not verified)

ஒரு பெண் உயர்ந்த பதவிக்கு வரவேண்டு மென்றால் அவளது ஜனன ஜாதகத்தில் லக்னாதி பதி லக்னத்தில் அல்லது 5-ல் அல்லது 9-ல் இருக்கவேண்டும். அதுவும் 2, 5, 9-ஆம் அதிபதி யுடன் இருந்தால், அவள் புகழுடன் வாழ்வாள்.லக்னாதிபதியும், 2-க்கு அதிபதியும் 5-ல் இருந்தால், அந்தப் பெண் பிறக்கும்போதே நல்ல வசதியுடன் பிறப்பாள். காலப்போக்கில் புகழுடன் இருப்பாள். லக்னாதிபதியும் 5-க்கு அதிபதியும் 9-ல் இருந்தால், அவள் தன் சுய முயற்சியால் பெரிய பதவியை அடைவாள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னாதிபதியும் 9-க்கு அதிபதியும் 5, 11-ல் இருந்தால், அவள் புகழுடன் வாழ்வாள். அவளுடன் அதிர்ஷ்டம் எப்போதும் இருக்கும். 5-க்கு அதிபதி உச்சமாக இருந்தால், அவள் தன் 20 வயதிற்குப் பிறகு 60 வயதுவரை புகழுடன் நட்சத்திரத்தைப்போல மின்னுவாள். 5-க்கு அதிபதி லக்னாதிபதியுடன் லக்னத் தில் இருக்க அதை குரு பகவான் பார்த்தால், அந்தப் பெண் அரசியலில் ஈடுபடுவாள். அல்லது அரசாங்கத்தின் ஏதாவது துறையில் பெரிய பதவியில் இருப்பாள்.ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5-ஆம் பாவத்தில் குரு, சூரியன், புதன் இருந்தால், அவள் அரசாங்கத்தின் பெரிய பதவியில் இருப்பாள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளில்! அவளுக்கு 9-க்கும் 10-க்கும் உரிய கிரகங்களின் தசை நடக்கும் போது புகழுடன் விளங்குவாள்.ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் சனி பகவான் இருந்தால், அதுவும் சுய வீட்டிலோ உச்சமாகவோ இருந்து அதை குரு பகவான் பார்த்தால், அந்தப் பெண் உலக அளவில் புகழுடன் இருப்பாள்.

ADVERTISEMENT

2-ல் சந்திரன், 3-ல் புதன்- சூரியன், 4-ல் சுக்கிரன் இருந்தால், அவள் ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும், 25 வயதிற்குப் பிறகு புகழுடன் வாழ்வாள். தைரியம்கொண்ட பெண்ணாக பெரிய பதவியில் இருப்பாள். அதே ஜாதகத்தில் ராகு 11-ல் இருந்தால், அவள் ராஜயோகத்துடன் வாழ்வாள்.லக்னத்தில் சனி, 4-ல் சுக்கிரன்- குரு, 5-ல் சூரியன்- புதன் இருந்தால், சாதாரண குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தாலும், அவள் திருமணமான பிறகு புகழுடன் வாழ்வாள். ஜாதகத்தில் 5-க்கு அதிபதி லக்னத்தில் உச்சமாக இருந்து, அதே ஜாதகத்தில் 11-ல் ராகு, 10-ல் குரு இருந்தால் அவள் நல்ல பெயருடனும், மதிப்புடனும் வாழ்வாள். லக்னத்தில் புதன் உச்சமாக இருந்து, 3-ல் சனி, 10-ல் சுக்கிரன் இருந்தால், அவள் பல காரியங்களை மிகவும் தைரியமாக முடித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெறுவாள்.ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னாதிபதி லக்னத்தில் இருந்து, 6-ல் செவ்வாய், 10-ல் குரு இருந்தால், அவள் தன் செயல்களைத் துணிச்சலாகச் செய்வாள்.

ADVERTISEMENT

31 வயதிற்குப் பிறகு நல்ல பெயருடனும் புகழுடனும் வாழ்வாள்.10-க்குரிய கிரகம் லக்னத்தில் உச்சமாக இருந்து, 2-ஆம் வீட்டில் சுக்கிரன், 6-ல் சனி, 10-ல் குரு, 11-ல் சந்திரன் இருந்தால், அவள் தன் 30 வயதிற்குப் பிறகு ஆன்மிகம், ஜோதிடம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க நபராக வருவாள். பேராசிரியையாக வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.லக்னத்தில் குரு, 9-ல் சுக்கிரன்- புதன், 10-ல் செவ்வாய் அல்லது சனி- செவ்வாய் இருந்தால், அப்பெண் தன் சுயமுயற்சியால் பெரிய தொழிலதிபராக வருவாள்.ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியான சுக்கிரன் லக்னத்தில் இருந்து, அதே ஜாதகத்தில் 4-ல் செவ்வாய், குரு அல்லது சனி, குரு இருந்து, சூரியன் 5, 11-ல் இருந்தால், அந்தப்பெண் கடுமையாக உழைத்து, உயர்ந்த பதவியில் புகழுடன் இருப்பாள். அரசியலில் பெரிய பதவியை வகிப்பாள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT