ADVERTISEMENT

உங்கள் வேலை தொழிலில் வெற்றிதரும் வண்ணங்கள் எவை?

02:38 PM May 07, 2019 | Anonymous (not verified)

குரு கிரகத்துக்குரிய நிறம் மஞ்சள். குருவின் எதிரி கிரகங்களாக புதனும் சுக்கிரனும் கூறப்பட்டுள்ளன. புதன் பச்சை நிறத்தையும், சுக்கிரன் வெள்ளை நிறத்தையும் கொண்டுள்ளனர். இதன்மூலம் குரு சார்புடைய தொழில் புரிபவர்கள் பச்சை, வெள்ளை நிறத்தைத் தவிர்ப்பது நல்லது என தெரிகிறது. இதிலும் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. குருவின் மீன ராசியில் புதன் நீசமடைவார். சுக்கிரன் உச்சமடைவார். எனவே வெள்ளை நிறத்தைவிட பச்சை நிறத்தை அறவே ஒதுக்குவது குரு சார்ந்த தொழில்புரிவோருக்கு சாலச் சிறந்தது என தெளிவாகிறது.

ADVERTISEMENT



நீண்டநாள் குழந்தை வரம் வேண்டிக் காத்திருக்கும் தம்பதிகள் கூடியமட்டும் பச்சை நிறத்தைத் தவிர்த்துவிடுங்கள். குருவுக்கு புதன் பகை மட்டுமல்ல; அவர் வீட்டில் (மீனத்தில்) நீசமும் அடைவார். எனவே குருவுக்கு பகை கிரக பச்சை நிறத்தை ஒதுக்கி, குருவின் நிறமான மஞ்சள் வண்ணத்தை அதிகமாகப் பயன்படுத்துங்கள். இதன்மூலம் குழந்தை உருவாகும் நிலை விரைவாகும். தடை தகர்க்கப்படும். சுக்கிரனுக்குரிய வண்ணம் வெண்மை. சுக்கிரனின் பகை கிரகங்களாக சூரியன், சந்திரன், குரு குறிப்பிடப்பட்டுள்ளன. "உத்தரகாலாம்ருதம்' சுக்கிரனின் பகை கிரகங்களாக சூரியனையும் சந்திரனையும் மட்டுமே சுட்டிக் காட்டுகிறது.

சனியின் நிறங்களாக கருப்பு, ஊதா, கிரே எனப்படும் சாம்பல் வண்ணம் கூறப்பட்டுள்ளன. சனியின் பகை கிரகங்களாக சூரியன், சந்திரன், செவ்வாய், கேது குறிப்பிடப்பட்டுள்ளன. "உத்தரகாலாம்ருதம்' சனிக்குப் பகையென்று சூரியன், சந்திரன், செவ்வாய் கூறப்பட்டுள்ளன ராகுவுக்கு செவ்வாயும், கேதுவுக்கு சனியும் பகைவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ராகுவின் நிறம் கருப்பு. தோல் பை, தோல் செருப்புக் கடைக்காரர்களும், தொழிற்சாலைகளில் கடினமான வேலை செய்பவர்களும், பழைய பொருட்கள் விற்பனை, சுரங்கத் தொழில் செய்பவர்களும் சிவப்பு நிறத்தைத் தவிர்த்துவிடுங்கள்.

ADVERTISEMENT



பழைய பேப்பர் கடை வைத்திருந்தாலும் சரி; மாபெரும் சுரங்கம் வைத்து அதன் அதிபராக இருந்தாலும் சரி- நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்துகொண்டே இருந்தால் அங்கு சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களைத் தவிர்த்துவிட்டு, ஊதா அல்லது கிரே கலர் பயன்படுத்திப் பாருங்களேன். முதலாளிகளிடம் ஏற்படும் ஒரு எதிரி மனப்பான்மை குறைந்து உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளிகள் நட்புடன் வேலை செய்ய ஆரம்பிப்பார்கள்.கேதுவின் வண்ணம் பழுப்பு அல்லது பல வண்ணம்.

வாழ்க்கை ஒழுங்காக, தடையில்லாமல் செல்ல எதனைப் பயன்படுத்த வேண்டும்- எதனைத் தவிர்க்க வேண்டும் என்ற சூட்சுமம் மனிதர்களுக்கு கண்டிப்பாகத் தெரியவேண்டும். வாழ்க்கை மேன்மையடைய, முதலில் ஒருவருக்கு "நோ' (சஞ) சொல்லத் தெரியவேண்டும் என்பர். வாழ்க்கை முன்னேற்றக் குறிப்புகளின் முதல் பாடம் இதுவாகத்தான் இருக்கும். இதனைப் படிக்கும்போது எளிதாகத் தோன்றலாம். ஆனால் நடைமுறை வாழ்வில் "நோ', "இல்லை', "மாட்டேன்', "முடியாது' என்று கூறுவது மிகமிகக் கடினம். சிலவற்றைத் தவிர்த்தால் வாழ்க்கை வண்டி சிக்கலிலில்லாமல் ஓடும். அதுபோல் சில வண்ணங்களைத் தவிர்த்தால், வாழ்க்கை எளிதாக அமையும். வண்ணங்களே வாழ்க்கைத் தடையாக விட்டுவிடாதீர்கள்.

-ஆர். மகாலட்சுமி.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT