ADVERTISEMENT

இன்றைய ராசிபலன் -  06.04.2023

11:59 PM Apr 05, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

இன்றைய பஞ்சாங்கம்

06-04-2023, பங்குனி 23, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 10.04 வரை பின்பு தேய்பிறை பிரதமை. அஸ்தம் நட்சத்திரம் பகல் 12.41 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை
04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிபலன் - 06.04.2023

மேஷம்

இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபார ரீதியான பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத உதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பண வரவுகள் இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் யோசித்து செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும். உடல் உபாதைகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வேலையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனநிம்மதி சற்று குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

கன்னி

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுப காரியங்கள் எளிதில் கைகூடும். எதிர்பாராத வகையில் வருமானம் பெருகும்.

துலாம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுப காரியங்கள் கைகூடும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.

மகரம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

மீனம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT