ADVERTISEMENT

நீலமேகப் பெருமாள் கோவில் வைகாசி விசாக பிரமோற்சவ தேரோட்டம் நிகழ்ச்சி! 

11:11 AM Jun 13, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்டம், குளித்தலையில் 500 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த நீலமேகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக பிரம்மோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வைகாசி விசாக பிரம்மோற்சவ திருவிழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு கடந்த ஜூன் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.

அதனைத் தொடர்ந்து நாள்தோறும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா கண்டார். வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் 9-வது நாளான இன்று, முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவ பெருமாள் அம்பாள்களுடன் எழுந்தருளிய திருத்தேரினை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று நாமம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். தேரானது பழைய ஆஸ்பத்திரி சாலை, பஜனை மடம், ஆண்டார் வீதி, அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT