ADVERTISEMENT

"இந்த கோயிலுக்கு வந்ததால் ‘பீஸ்ட்’ பட வாய்ப்பு கிடைத்தது" - சுஜாதா பாபு பகிரும் சுவாரஸ்யமான தகவல்கள்

11:40 AM Oct 19, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பிரபல தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான சுஜாதா நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது "செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராம வீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூன்று தினங்கள் விஷேசமாகக் கொண்டாடுகிறது. வாரந்தோறும் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்களும் வருவார்கள். இன்னும் விஷேசமான நாட்கள் என்றால், கார்த்திகைத் திருநாள் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம்தான் இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தி, ஸ்ரீ ராம நவமி ஆகிய நாட்கள் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

அந்த நாட்களில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது குட முழுக்கு பணிகள் நடைபெற்று வருவதால் கூட்டம் குறைவாகவே உள்ளது. நாம் ஒரு கோயிலுக்கு செல்கிறோம்; ஒரு சுவாமியை நமஸ்காரம் செய்கிறோம் என்றால், அது சாதாரண விஷயம் கிடையாது. எவ்வளவோ மக்கள் எவ்வளவோ நாட்கள் திரும்பத் திரும்ப அந்தக் கோயிலுக்கு சென்று தனது மன பாரங்களை இறக்கி வைப்பார்கள். நமக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள். உலகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள். அந்த பிரார்த்தனைகள் திரும்பத் திரும்ப வரும்போது, இந்த இடத்தில் ஒரு நல்ல பாசிடிவ் வைப்ஸ் கிடைக்கும்.

அடிக்கடி நான் இக்கோயிலுக்கு வருவது மன அமைதியைத் தருகிறது. பொதுவாக, இந்த கோயிலில் ஆஞ்சநேயருக்கு ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவோம். நாம் அவர்கிட்ட கூறினால் போதும், நமக்கு என்ன வேலை செய்ய வேண்டுமோ, அதை செய்து முடிப்பார். நாம் ஆஞ்சநேயர் என்று எழுதுவதற்கு பதில், ஸ்ரீ ராம ஜெயம் எழுதி ஆஞ்சநேயருக்கு மாலையாக அணிவிக்கலாம். துளசி மாலையையும் போடலாம். சனிக்கிழமை அன்று துளசி மாலை போடுவது, வெற்றிலை மாலை போடுவது இங்கு ரொம்ப விஷேசம். அதேபோல், வெண்ணை காப்பு செய்வார்கள். எதுவாக இருந்தாலும் நம் மனது ஒன்றி இக்கோயிலில் வழிப்பட்டோம் என்றால் கண்டிப்பாக நல்லது நடக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.

அதேபோல், கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களும் நன்றாக இருக்கும். அதேபோல், இக்கோயிலில் தேங்காய் கட்டிவிட்டு செல்வார்கள். இந்த தேங்காய் கட்டுவது எதற்கு என்றால் இளநீர் முதலில் எடை அதிகமாக இருக்கும்; அது காய்ந்த பிறகு எடை குறைவாக இருக்கும். காற்று அல்லது தண்ணீரில் அடித்துச் சென்றாலும், அது எந்த இடத்திற்கு போகிறதோ, அது வளர ஆரம்பிக்கும். நமது வாழ்க்கையிலும் அந்த வளர்ச்சி வர வேண்டும் என்பதற்காக, இந்த மட்டைத் தேங்காய்யைக் கட்டுகிறார்கள். பின்பு, 45 நாட்கள் கழித்து நமக்கு உண்டான பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம். கடவுள் மேல் நமது பாரத்தைப் போட்டுவிட்டு எப்படியாவது இந்த வேலை நடக்க வேண்டும் என்று நினைக்கும் போது அந்த பாசிட்டிவ் வைப்ஸ் எங்கிருந்தாலும், நல்ல காரியத்தைக் கண்டிப்பாக நடத்திக் கொடுத்து விடுவார்கள்.

அதற்காகத்தான் இந்த மட்டை தேங்காயைக் கட்டி வழிபாடு செய்கிறார்கள். 45 நாட்களுக்குப் பிறகு அந்த மட்டை தேங்காயை உடைத்து ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று சுவீட் செய்து சாப்பிட்டோமேயானால் அந்த வேலையும் நடக்கும். நமது மனசும் ரொம்ப திருப்தியாக இருக்கும். அதனால், நான் அடிக்கடி வந்து செல்லும் கோயில் புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோயில். கார்த்திகை மாதம் இக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறவிருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால், ஆஞ்சநேயரைப் பார்க்க முடியவில்லை.

குடமுழுக்கு முடிந்த பிறகு நான் இக்கோயிலுக்கு வருவேன். சனிக்கிழமை கோயிலுக்கு வரும்போது, அர்ச்சகர் தண்ணீரை எடுத்து நமது முகத்தில் தெளிப்பார். அந்த தண்ணீர் தெளிக்கும்போது, பார்த்தால் நமது மனதில் இருக்கும் பிரச்சனைகள், நமது மனதில் இருக்கும் சந்தேகங்கள், நமது மனதில் இருக்கும் பயம் எல்லாமே உடனடியாக விடுபட்டுவிடும்.

நான் சினிமாவில் நடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, எந்த மாதிரியான வாய்ப்புகள் நமக்கு கிடைக்கும்? நாம் வெளியே சொல்ல இன்னும் ஆரம்பிக்கவில்லையே, இப்போது செய்தி வாசிப்பாளராகத்தானே இருக்கிறோம். யார்கிட்ட போய் சொல்வது? எப்படி சினிமா துறைக்குள் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பின்னர், இக்கோயிலுக்கு வந்தேன். பிரார்த்தனை செய்தேன். கோயிலுக்கு வந்துவிட்டு வீட்டுக்குச் சென்ற இரண்டாவது நாளே, எனக்கு சன் பிக்சர் நிறுவனத்தில் இருந்து தொலைபேசியின் மூலம் அழைப்பு வந்தது. அதற்குப் பிறகுதான் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்தேன்". எனக் கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT