ADVERTISEMENT

ஏமனில் 85000 குழந்தைகளை காவு வாங்கிய பசி....

01:26 PM Nov 22, 2018 | santhoshkumar


ஏமனில் நடக்கும் உள்நாட்டு போரில் பசி காரணமாக 85,000 குழந்தைகள் பலியாகியுள்ளதாக லண்டனை சேர்ந்த சேவ் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏமனில் கடந்த மூன்று ஆண்டுகளில் பசி காரணமாக பல ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். ஏமனில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் 80 லட்சம் மேர் உணவின்றி தவிக்கும் அவலநிலை நிகழ்வதாக சில மாதங்களுக்கு முன்பு ஐநா தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபருக்கு ஆதரவாக சவூதியும், கிளர்ச்சி படைக்கு ஈரான் ஆதரவாகவும் உள்ளது.

ADVERTISEMENT

சவூதி அரேபியா தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறது. கடந்த ஆறு வருடமாக நடக்கும் இந்த போரினால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT