ADVERTISEMENT

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வழிகாட்டு நெறிமுறைகள் - உலக சுகாதார நிறுவனம் வெளியீடு!

10:59 AM Aug 26, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகத்தில் 1.4 பில்லியன் மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், அதில் 14 சதவீதம் பேர் மட்டுமே இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் செய்து வெளியிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

இந்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களின் இரத்த அழுத்த அளவு 130-ஐ தொட்டாலே அவர்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இதய நோய் பாதிப்பற்றவர்களின் இரத்த அழுத்த அளவு 140/90 ஆக இருந்தால் அவர்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் ஒருவருக்கு சோதனையின்போது 130-139 / 80-89 என இரத்த அழுத்த அளவு இருந்தால், அந்த நபர் ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் இரத்த அழுத்த அளவை சோதித்துக்கொள்ள வேண்டும் எனவும், ஒருவேளை அவருக்கு இதய பாதிப்பு இருந்தால் ஒரு வருடத்திற்கு முன்னதாகவே இரத்த அழுத்த அளவை சோதித்துக்கொள்ள வேண்டும் எனவும் உலக சுகாதார மையத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன.

கடந்த 21 வருடங்களில் உலக சுகாதார நிறுவனம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வெளியிடும் முதல் வழிகாட்டு நெறிமுறை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT