ADVERTISEMENT

கணக்கில்லாத உயிரிழப்புகள்; சிதைந்த துருக்கி

03:15 PM Feb 09, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது உலகம் முழுவதும் உள்ள மக்களை கடும் பீதியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

துருக்கியில் நேற்று முன்தினம் இந்திய நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் காஸியண்டெப் நகரில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் எல்பிஸ்டான் பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டன. நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்ததால் குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் நடந்தது. மீட்புப் பணிகளை கடந்த புதன் கிழமை துருக்கி அதிபர் எர்டோகன் பார்வையிட்டார். நிலநடுக்கம் ஏற்பட்ட முதல்நாள் தொய்வு இருந்தாலும் தற்போது நிலைமை சீராகி வருவதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்கும் மேல் ஆனதால் இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பது கடினமான விஷயம் என மீட்புப் பணிகளில் தெரிவிக்கின்றனர். இந்த நிலநடுக்கம் கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமான ஒன்றாக கருதப்படுகிறது. துருக்கியில் மட்டும் சுமார் 60 ஆயிரம் பேர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 24 நாடுகளுக்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது வரை துருக்கியில் 12,873 பேரும் சிரியாவில் 3,162 உயிரிழப்புகளும் நிகழ்ந்து இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. 1999 ஆம் ஆண்டு 7.4 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 17 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT