ADVERTISEMENT

ரகசிய ஆவணங்களை கையோடு தூக்கிச் சென்ற ட்ரம்ப்- எஃப்.பி.ஐ அதிரடி!

12:06 PM Aug 13, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் பங்களாவில் எஃப்.பி.ஐ ரெய்டு நடத்தியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த சோதனையில் மிக முக்கிய ரகசிய ஆவணங்களை எஃப்.பி.ஐ கைப்பற்றி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 9ஆம் தேதி தெற்கு ப்ளோரிடாவில் உள்ள தனது கடற்கரை பங்களாவில் எஃப்.பி.ஐ சோதனை நடத்தியது என ட்ரம்ப் கூறியிருந்தார். இதன்பின் வெளியான தகவல்கள் அமெரிக்க அரசியல் வட்டத்தில் அதிர்வை கிளம்பின. முன்னாள் அதிபர் ட்ரம்ப் அமெரிக்க உளவுத்துறை சட்டத்தை மீறும் வகையில் பதவி விலகிய பிறகு முக்கிய ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்காமல் கையோடு எடுத்து சென்றுவிட்டதாகப் புகார்கள் கிளம்பிய நிலையிலேயே இந்த சோதனையானது நடைபெற்றது. இந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதியின்படி எஃப்.பி.ஐ ட்ரம்பிற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் கடந்த வாரம் ப்ளோரிடாவில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்களை நீதிமன்றத்தில் எஃப்.பி.ஐ தெரிவித்தது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கிய ரகசிய ஆவணங்களும் உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த சோதனை குறித்து ட்ரம்ப் அவருடைய 'ட்ரூத்' எனும் சமூகவலைத்தளத்தில் 'தன்னிடம் கேட்டிருந்தால் ஆவணங்களை ஒப்படைத்திருப்பேன்; இதற்காக வீட்டின் பூட்டை உடைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது' என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT