ADVERTISEMENT

லெபனானில் நடந்தது தாக்குதலா..? ட்ரம்ப் கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை...

03:57 PM Aug 05, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடைபெற்ற வெடிவிபத்தை தாக்குதல் எனக் குறிப்பிட்டு ட்ரம்ப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ரூட்டின் துறைமுகப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்து அந்நகரத்தையே தலைகீழாக திருப்பி போட்டுள்ளது. நகரின் ஒருபகுதியில் ஏற்பட்ட இந்த வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட அதிர்வலைகள் அந்நகரத்தில் புறநகர்ப் பகுதிகளிலும் கடுமையாக உணரப்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், இதுவரை இந்த விபத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 4000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதால் கட்டிட இடிபாடுகளில் அவர்கள் சிக்கியிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இது ஒரு பயங்கரமான தாக்குதல் போல் தெரிகிறது. எங்கள் ஜெனரல்களில் சிலரும், இது தாக்குதலாகவே இருக்கும் எனக் கருதுகிறார்கள். அங்கு வெடித்தது ஒருவகை குண்டாக இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார். லெபனான் அரசு இதனை வெடிவிபத்து என்றே குறிப்பிட்டுவரும் நிலையில், இது தாக்குதலாக இருக்கலாம் என்ற ட்ரம்ப்பின் கருத்து இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT