ADVERTISEMENT

சாயாத மக்கள் போராட்டம்... சாய்ந்தது ராஜபக்சே அரசு!

04:36 PM May 09, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கை பிரதமர் ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஏற்கனவே இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுப் பின்வாங்கப்பட்ட நிலையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நடத்திவந்த போராட்டத்தின் பலனாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவரது ராஜினாமா கடிதம் குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே என்ன முடிவெடுப்பார் என்ற யூகங்கள் அங்கு கிளம்பியுள்ளது. நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசை உருவாக்குவது தொடர்பான அம்சங்கள் இடம்பெற்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் புதிய இடைக்கால அரசு நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT