ADVERTISEMENT

தொடர் போராட்டம் - இலங்கை பிரதமர் ராஜபக்சே ராஜினாமா?

07:28 PM Apr 03, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பால், மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. தொடர்ச்சியான பாதிப்புகளால் பொங்கி எழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வாகனம் எரிப்பு போன்ற உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின.

கோத்தபய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய கூட்டணி கட்சிகளும் ஆட்சியை கலைத்துவிட்டு காபந்து அரசை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டும் வரும் பொருட்டு, இலங்கையில் அவசரநிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் மக்கள் போராட்டத்தை முடக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது திடீர் திருப்பமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இலங்கை அரசு சார்பாக இதுவரை வெளியாகவில்லை.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT