
போலி ஆதார் அட்டை பெற்ற இலங்கை சேர்ந்த ஒருவரையும், அதற்கு உதவிய நபரையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் மதுரை நிகழ்ந்துள்ளது.
மதுரை மாநகர் பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்திய போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். காரில் இருந்த காசிவிஸ்வநாதன், ராஜேஷ் ஆகிய இருவரின் ஆவணங்களையும் கேட்டனர். ஆவணங்களைப் பார்த்த பொழுது ராஜேஷ் போலி ஆதார் அட்டை வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஷ் இலங்கையில் இருந்து தமிழகம் வந்ததும், அவரது உண்மையான பெயர் சிவராஜ் என்பதும் தெரியவந்தது. காசி விஸ்வநாதன் உதவியுடன் ராஜேஷ் போலி பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் தயாரித்து வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)