ADVERTISEMENT

''பூமிக்கு என்னவோ ஆக போகுதோ..?''- பீதியை கிளப்பிய விநோத மேகக்கூட்டம்!

06:59 PM Nov 26, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

காலநிலை மாற்றம் தொடர்பான புதிய புதிய நிகழ்வுகளை உலகம் அனுதினம் சந்தித்துவருகிறது. உலகப் பந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப் பாறைகள் உருகிவருவது சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளத்தில் இன்ஸ்டன்டாக வைரலாகியுள்ளது வெண்பஞ்சு குவியல் மேகங்கள்.

அர்ஜென்டினாவில் வானில் மேகங்கள் திடீரென குவியல் குவியலாக சற்று சீரான இடைவெளியில் அடுக்கி வைத்ததைப் போல தோன்றியது. இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த மக்கள் அந்த விநோத மேகக்கூட்டத்தை படம்பிடித்து சோசியல் மீடியா பக்கங்களில் பதிவேற்றியதைத் தொடர்ந்து அது வைரலானது. இந்த மேகக்கூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது என சிலரும், அய்யாயோ பார்க்கவே பயமாக உள்ளது உலகத்திற்கு என்னவோ நடக்கப்போகிறது என்று சிலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் இது போலி அனிமேஷன் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த மேகக்கூட்டம் உண்மைதான். இந்த நிகழ்வு மம்மடஸ் (mammatus) என்று அழைக்கப்படுகிறது என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மம்மடஸ் இடியுடன் மழை அல்லது ஆலங்கட்டி மழை வருவதற்கான அறிகுறிதான் எனவும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT