ADVERTISEMENT

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா

02:35 PM May 06, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவா மாநிலம் பெனாலியம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளும் 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் (04.05.2023) தொடங்கியது. இந்த அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், பார்வையாளர்களாக உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று (05.05.2023) பாகிஸ்தான் வெளியுறவுத்துறை பிலாவல் பூட்டோ பேசுகையில் தீவிரவாதத்தை ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார். அப்போது மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசுகையில், "உலக நாடுகள் கொரோனா தொற்று பாதிப்புகளை எதிர்கொண்டிருந்த நிலையில் ஒரு நாட்டில் மட்டும் தீவிரவாத செயல்பாடுகள் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது.

ஜம்மு காஷ்மீர் இப்போதும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். தீவிரவாதத்தை எந்த விதத்திலும் நியாயப்படுத்தக் கூடாது என்பதில் இந்தியா மிகவும் உறுதியாக உள்ளது. அனைத்து தீவிரவாத நடவடிக்கைகளும் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். எந்த வழிகளில் எல்லாம் தீவிரவாத செயல்பாடுகளுக்கு நிதியுதவி கிடைக்கிறதோ அந்த வழிகளை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். தீவிரவாத செயல்பாடுகளுக்கு நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தான் மீதான நம்பகத்தன்மை அந்நாட்டின் ரூபாய் மதிப்பை விட வேகமாக குறைந்து வருகிறது" என பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT