புல்வாமா தாக்குதலுக்கும் பதில் தாக்குதலாக இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

Advertisment

hghgjhgj

ஆனால் இந்த தகவலை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசியிருந்த அவர், "எதிரிகளின் பகுதிகளை ஊடுருவித் தாக்கமுடியும் என்பதை தெரியப்படுத்துவதுதான் நோக்கமே தவிர தாக்குதலில் மனித உயிர் இழப்புகளை ஏற்படுத்துவது அல்ல. இந்தியா மற்றும் சர்வதேச ஊடகங்களும் மோடி கூறியதாக சில தகவல்களை வெளியிட்டன. ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பற்றி பிரதமர் எதுவும் சொல்லவில்லை. நான் கேட்கிறேன், பிரதமர் மோடியோ, அரசாங்க செய்தித் தொடர்பாளரோ அல்லது எங்கள் கட்சித் தலைவர் அமித் ஷாவோ பாலாகோட் தாக்குதலில் இத்தனை பேர் இறந்தார்கள் என்று எப்போதாவது சொன்னார்களா? எந்த ஒரு உயிரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை" என கூறினார். அவர் இப்படி பேசிய அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.