ADVERTISEMENT

"இந்த விஷயத்தால் நமது உறவு பாதிப்பதை விரும்பவில்லை" - மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா விளக்கம்...

04:34 PM Aug 27, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அலெக்ஸி நவல்னி பிரச்சனையைக் காரணமாக வைத்து மேற்கத்திய நாடுகளுடனான உறவு பாதிப்பதை விரும்பவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய எதிர்க்கட்சியின் முக்கிய தலைவரான அலெக்ஸி நவல்னி ஆளும் புதின் அரசின் அரசாங்கத்தில் நடைபெற்று வரும் ஊழல்களை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார். இதனால் ஆளும்கட்சியின் மிகமுக்கிய எதிர்ப்பாளராகப் பார்க்கப்படும் நவல்னிக்கும், ஆளுங்கட்சியினருக்கு இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நவல்னி சைபீரியாவிலிருந்து மாஸ்கோவிற்கு விமானத்தின் சென்று கொண்டிருந்தபோது, அவருக்குத் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அதனால் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கியுள்ளனர்.

அவரது உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு விமானத்தில் வழங்கப்பட்ட தேநீரில் விஷம் கலக்கப்பட்டிருப்பதாக அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தது ரஷ்ய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே நவல்னி கோமா நிலைக்குச் சென்றதால், அவரை வெளிநாட்டிற்குக் கொண்டுசென்று சிகிச்சையளிக்க வேண்டும் என அவரது கட்சியினர் கேட்டனர். ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் தலையிட்டு நவல்னியை ஜெர்மன் கொண்டுசெல்ல அனுமதி பெற்றனர். இதனையடுத்து அவருக்கு தற்போது ஜெர்மனியில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது குறித்து வெளிப்படையான விசாரணை தேவை என பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள ரஷ்யா, "அலெக்ஸி நாவல் உடல்நிலை பாதிப்பு காரணமாக மேற்கத்திய நாடுகளுடனான உறவு பாதிப்பதை நாங்கள் விரும்பவில்லை. அலெக்ஸிக்கு மருத்துவச் சிகிச்சை இன்னும் முடிவடையவில்லை. எனினும் அலெக்ஸி எதன் காரணமாக நோய்வாய்ப்பட்டார் என்பதை அறிய ரஷ்யாவும் ஆர்வமாக இருக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT