ரஷ்ய குத்துச்சண்டை வீரர் மாக்சிம் தாதாஷேவ் மேரிலாந்தில் நடந்த சண்டையின் போது ஏற்பட்ட மூளைக் காயங்களால் உயிரிழந்ததாக ரஷ்ய குத்துச்சண்டை கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

famous russian boxer passed away

Advertisment

Advertisment

அமெரிக்காவில் நடந்த சண்டையின் போது மாக்சிம் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை சோதித்த மருத்துவர்கள் மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். பின்னர் இதற்காக அறுவை சிகிச்சையும் மேகொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது இந்த இறப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.