ADVERTISEMENT

எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழரிடமிருந்து பறித்த ராஜபக்சே; இலங்கையில் மீண்டும் பரபரப்பு

10:57 AM Dec 19, 2018 | kirubahar

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கையில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுகிழமை மீண்டும் பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே. இதனையடுத்து அரசியல் குழப்பங்கள் சுமூக நிலையை எட்டிவிட்டதாக அனைவரும் நினைத்த நிலையில் தற்பொழுது மீண்டும் புதிய சிக்கல் உண்டாகியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வகித்த இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் பதவி தற்பொழுது முன்னாள் பிரதமர் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் கரு ஜெயசூர்யா நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதிபர் சிறிசேனாவின் உத்தரவுப்படி இது நடைமுறைப் படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக உறுப்பினர் கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும் என்ற அடிப்படையில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான மகிந்த ராஜபக்சே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். ஆனால் இதற்கு சம்பந்தன் மற்றும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தலில் வெற்றிபெற்றதன் அடிப்படையில் பதவி வழங்காமல் கட்சி மாறி வந்த அவருக்கு பதவி வழங்க்கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT