இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது.

Advertisment

Ranil

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இதனால், ரணிலின் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் ரணிலுக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் பதிவாகின. 26 பேர் வாக்குப்பதிவில் கலந்துகொள்ளவில்லை.

கிட்டத்தட்ட 12 மணிநேரமாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தியும், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றும் எதிர்க்கட்சிகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது. தமிழர்களின் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.