ADVERTISEMENT

'ராஜபக்சே சகோதரர்களே காரணம்' - இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

07:53 AM Nov 15, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு நாடுகளும் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உலக நாடுகள் ஒவ்வொன்றாக மீண்டு எழுந்து வந்தது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் இலங்கையில் மட்டும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களே போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவானது.

இது உலக அளவில் கவனம் பெறும் மிகப்பெரிய மக்கள் போராட்டமாக வெடித்தது. அமைச்சர்களின் வீடுகள், அதிகாரிகளின் வீடுகள் மக்களாலேயே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. வன்முறைகளும் வெடித்தது. அதனைத் தொடர்ந்து ராஜபக்சே சகோதரர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நிகழ்வுகளும் நடந்திருந்தது.

இந்நிலையில் ராஜபக்சே குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அதிகாரிகள் உள்பட 13 பேருக்கு எதிராகத் தனியார் அமைப்பு ஒன்று இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் அஜித் நிவார்ட் உள்ளிட்டோரின் தவறான நடவடிக்கைகள், அலட்சியம்தான் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT