ADVERTISEMENT

இரட்டைக்கோபுர தாக்குதலில் சேதமடைந்து 17 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட ரயில் நிலையம்!!

01:51 PM Sep 10, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்ட சுரங்க ரயில் நிலையம் 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சீரமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அல் கொய்தா தீவிரவாத அமைப்பால் 2001-ஆம் ஆண்டு செப்டெம்பர் 11-ஆம் தேதி நியூயார்க் நகரில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் இறந்தனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பல இடங்கள் மண்ணுக்குள் புதைந்தது. அதில் அங்குள்ள சுரங்க ரயில் நிலையமும் ஒன்று. அந்த சுரங்க ரயில் நிலையத்தை புனரமைக்க மெட்ரோ பாலிட்டன் ஆணையம் முயற்சி எடுத்து கடந்த 2015-ஆண்டிலிருந்து சீரமைப்பு பணிகளை தொடங்கியது. புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது 17 ஆண்டுகளுக்கு பின் அந்த ரயில் நிலையம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது அங்குள்ள மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT