ADVERTISEMENT

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவுகட்டுங்கள்! - அமெரிக்காவில் நூதன போராட்டம்

01:18 PM Mar 14, 2018 | Anonymous (not verified)

நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முடிவுகட்ட, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்பாக நூதன போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் கடந்த மாதம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் அமெரிக்க வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு, துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த சட்டவிதிகளை மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், நேற்று காலை அவாஸ் எனும் அமைப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்பு ஏழாயிரம் ஷூக்களை வரிசையாக வைத்து நூதன போராட்டத்தை நடத்தியது. 2012ஆம் ஆண்டு சாண்டி ஹூக் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருந்து, புளோரிடா துப்பாக்கிச்சூடு வரையிலான படுகொலை நினைவுபடுத்தும் வகையில் இந்த எண்ணிக்கையிலான ஷூக்களை வைத்ததாக கூறியுள்ள இந்த அமைப்பு, துப்பாக்கிகளைக் கையாளும் சட்டவிதிகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

இந்த ஷூக்களை நன்கொடையாக அவாஸ் அமைப்பு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அந்த அமைப்பு துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள், பொதுமக்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் என பலரும் தங்களது ஷூக்களை நன்கொடையாக வழங்கியதாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT