சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் துப்பாக்கி முனையில் அனைவரையும்சிறைவைத்ததோடு ஒருவரை சுட்டு வீழ்த்திய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அமெரிக்கா லாஸ் ஏஞ்சலில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு காரில் வேகமாக வந்த மர்ம நபர் ஒருவன்கடையின் முன் பகுதியை காரல் இடித்து சேதப்படுத்தியுள்ளான்.
பிறகு கடைக்குள் புகுந்த அவன் அங்கு இருந்த வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் அடைத்து வைத்துளான். அவர்களை காப்பற்ற சென்ற பாதுகாவலர்களையும் தாக்கியுள்ளான். இதனால் அந்த பகுதியேபதற்றமானது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இறுதியில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்குவந்த போலீசார் பலமணி நேரம் போராடினர். இந்த நேரத்தில் உள்ளே உள்ள ஒரு பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவீழ்த்திய அவன் அந்த பெண்ணின் சடலத்தை வெளியே தூக்கி எறிந்துள்ளான். சிலர் பின்புறம் உள்ள ஜன்னல்கள் வழியே எகிறி குதித்து தப்பித்தனர்.இறந்த சடலத்தை மீட்ட போலீசார் அவனை பல முயற்சிகளுக்கு பிறகு கைது செய்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக அவனது பாட்டி மற்றும் மனைவியை துப்பாக்கியில் சுட்டு கொன்றுவிட்டு அதே கோபத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளான் என தெரியவந்துள்ளது.