ADVERTISEMENT

நிலநடுக்கத்திலும் தொழுகை! உலகை வியக்கவைத்த இஸ்லாமியர்! வீடியோ இணைப்பு

12:04 PM Aug 07, 2018 | vasanthbalakrishnan


இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் நேற்றுமுன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு கடலோர பகுதியில் 10 புள்ளி 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாக பதிவாகியது. அந்த நிலநடுக்கத்தில் இதுவரை 91 பேர் இறந்தனர்.

ADVERTISEMENT

பல வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், பிரபல சுற்றுலாப் பகுதியான பாலித் தீவு, கிழக்கு ஜாவா உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நேரம் வரை நீடித்தது. இதனால் கடலோர பகுதிகளில் பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 91 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 1000 திற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ADVERTISEMENT

அந்த நிலநடுக்கத்தின் பொழுது தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய இளைஞர் ஒருவர் நிலநடுக்கம் வருவதை உணர்ந்தும் தொழுகையை பாதியில் நிறுத்தாமல் சுவரை பிடித்தபடி தொழுகையை தொடர்ந்தார். நிலநடுக்க பீதியில் அனைவரும் ஓட அந்த நபர் உயிருக்கு பயப்படாமல் தொழுகையை மேற்கொண்ட வீடியோ வெளியாகி அதிகம் பகிரப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT